மதுரையில் விஜய் கட்சி தொடங்குகிறாரா? பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

நடிகர் விஜய் ஜூன் 22-ம் தேதி மதுரையில் கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்ற தகவல்

நடிகர் விஜய் ஜூன் 22-ம் தேதி மதுரையில் கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்ற தகவல் பரவ, ஒவ்வொருவரும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை விசாரிக்க தொடங்கிவிட்டார்கள். அதற்கு காரணம் மதுரை நகரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு போஸ்டர். 

'தின விஜய்' என்ற  நாளிதழ் போன்ற டிசைனில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ''ஜூன் 22-ல் முடிவு எடுக்கிறார் விஜய். தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார் விஜய்'' என்று தலைப்பிட்டு அதன் கீழ் ''தமிழக மக்கள் மகிழ்ச்சி, அரசியல் கட்சிகள் அதிர்ச்சி, விவசாயிகள் வரவேற்பு, திரையுலகினர் வாழ்த்து'' என்று ஒரு  கட்சி ஆரம்பித்தால் எப்படி செய்தி வருமோ அதுபோல் வார்த்தைகளுடன் விஜய் பிரஸ் மீட் கொடுப்பதுபோல் அந்த போஸ்டரை ஒட்டியுள்ளார்கள். 

மதுரையில் விஜய்

இதைப்பார்த்து அரசியல்வாதிகள்  மட்டுமில்லாமல் உளவுத்துறையினரும் விசாரிக்கத்தொடங்கி விட்டார்கள்.  பிறகுதான் தெரிந்தது இது அவருடைய பிறந்த நாள் வருவதை முன்னிட்டு அந்த தேதியை குறிப்பிட்டு போஸ்டர் அடித்திருக்கிறார்கள் என்று. இதுபற்றி மதுரை மாநகர விஜய் ரசிகர் மன்றத் தலைவர் தங்க பாண்டியனிடம் கேட்டோம், ''அரசியல் கட்சி ஆரம்பிக்கிற நிகழ்ச்சி எல்லாம் மதுரையில் இல்லை, இளையதளபதி மேல் அதிக பிரியம் கொண்ட ரசிகர்கள் வித்தியாசமாக இருப்பதற்காக இப்படி போஸ்டர் அடித்துள்ளனர் அவ்வளவுதான்' என்றார். கடந்த இரண்டு நாள்களாக இந்த போஸ்டர் பலரையும் பேச வைத்துவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!