வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (02/05/2018)

கடைசி தொடர்பு:19:50 (02/05/2018)

ஞானவேலுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் சிவகார்த்திகேயன்! - புதிய பட பூஜை

சிவகார்த்திகேயன்-இயக்குநர் ராஜேஷ் எம் இருவரும் இணையும் படத்தின் பூஜை இன்று நடந்தது.

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், பிறகு 'மெரினா’, '3’, 'எதிர்நீச்சல்’ என்று சின்ன பட்ஜெட் படங்கள் மூலம் வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வளர்ந்து இருக்கிறார். இவர் சினிமாவுக்கு வந்த புதிதில் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துத் தருவதாகப் பேசி முடிவாகி இருந்தது.

சிவகார்த்திகேயன் 

ஆனால், சிவகார்த்திகேயனும் ஞானவேல்ராஜாவும் வெவ்வேறு திசைகளில் பயணமாக அந்த கமிட்மென்ட் மட்டும் நிறைவேறாமலேயே இருந்தது. ஆனால், தற்போது பேசியபடி ஞானவேல் ராஜாவுக்குப் படம் நடித்துத் தர சிவகார்த்திகேயன் முன்வந்தார். அந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் எம் இயக்குவதாகப் பேசி முடிவானது. 

சிவகார்த்திகேயன்

அந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிக்கிறார். இது நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் சினிமா. இயக்குநர் ராஜேஷ் கதையைவிட காட்சிக்குக் காட்சி நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே, தன் படத்தை இயக்குவார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இணைவதால் ராஜேஸின் மற்ற படங்களைவிட இதில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

சிவகார்த்திகேயன்

கொஞ்சம் கதையும் இருக்கிறமாதிரி பார்த்துக்கங்க சாரே!.