`எஸ்.துர்கா’ படத்தை ஸ்க்ரீன் பண்ணுனா வெடிகுண்டு வைப்போம்னு மிரட்டுனாங்க..! - தமிழ் ஸ்டுடியோ அருண்

எஸ் துர்கா

சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் சார்பாக மாதம் ஒரு படத்தின் திரையிடலையும் கலந்துரையாடலையும் நிகழ்த்தி வருகிறார் தமிழ் ஸ்டுடியோ அருண். மார்ச் மாதம் பாலு மகேந்திராவின் `அழியாத கோலங்கள்’ படம் மூலம் தொடங்கிய இந்த நிகழ்வில், ஏப்ரல் மாதம் `3-IRON’ எனும் படம் திரையிடப்பட்டது. இந்த மாதம் மலையாளத்தில் சணல் குமார் சசிதரண் இயக்கிய `எஸ்.துர்கா’ படத்தை திரையிடுகிறார்கள். முதலில் `செக்ஸி துர்கா’ என்று பெயர் வைக்கப்பட்டு, அதனால பல தடைகளைச் சந்தித்து `எஸ்.துர்கா’ என்று பெயர் மாற்றம் செய்து இந்தப் படம் வெளியானது. 

தமிழ் ஸ்டுடியோ அருண்

படத்தை வெளியிடுவதற்கு படக்குழு பல சிக்கல்களைச் சந்தித்தது போலவே, இந்தப் படத்தை ஸ்க்ரீன் செய்வதற்கும் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார் தமிழ் ஸ்டுடியோ அருண். அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ``மே மாதம் 6  ம் தேதி (வருகிற ஞாயிற்றுக்கிழமை) `எஸ்.துர்கா’ படத்தின் திரையிடல் இருக்கும்னு அறிவிச்சதும், எங்க அலுவலகத்துக்கு போனில் மிரட்டல் வந்தது. `செக்ஸி துர்கா’ படத்தோட பெயரை `எஸ்.துர்கா’னு மாத்திட்டாலும், இந்துத்துவா குரூப் இந்தப் படத்தை ஸ்க்ரீன் பண்ணக் கூடாதுனு நினைக்கிறாங்க. போன் பண்ணி, `தைரியம் இருந்தா படத்தை ஸ்க்ரீன் பண்ணு. நாங்க அந்த தியேட்டருக்கே வெடிகுண்டு வைப்போம்’னு மிரட்டியிருக்காங்க. ஒரு முறைதான் போன் வந்துச்சு. ஆனால், அதுக்கப்பறம் எங்களோட ஃபேஸ்புக் போஸ்ட் ரீச்சாகாத அளவுக்கு அதை ரிப்போர்ட் கொடுத்து முடக்கி வெச்சுட்டாங்க. அதனால் பல பேருக்கு இந்தப் படம் ஸ்க்ரீனாகும் சேதி போய் சேரவே இல்லை. அதனால் சில இடங்களில் விளம்பர பேனர்கள் வைத்து தெரியப்படுத்தியிருக்கோம். இப்போது வரை 80 சதவிகித டிக்கெட்கள் விற்பனையாகிடுச்சு. இந்தப் பிரச்னையினால் படம் பார்க்க வரவங்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாதுனு அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுத்துட்டு இருக்கோம். கண்டிப்பாக எந்தப் பிரச்னையும் தடையும் இல்லாமல் வருகிற ஞாயிற்றுக்கிழமை எஸ்.துர்கா திரையிடப்படும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!