வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (07/05/2018)

கடைசி தொடர்பு:13:35 (07/05/2018)

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இசை உருவான வீடியோ வெளியீடு

அக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் படம், 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சுஜா வாருணி, சாயா சிங், அஜ்மல், ஆனந்தராஜ், நரேன் எனப் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இரவுக்கு ஆயிரம் கண்கள்

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசரும், ட்ரெய்லரும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'விக்ரம் வேதா' படத்தில் பின்னணி இசையில் கலக்கிய சாம் சி.எஸ், இந்தப் படத்தில் இசையமைத்துள்ளார். 'இந்தப் படத்தின் இசை உருவான விதம்' என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தப் படம், வரும் மே 11-ம் தேதி திரைக்கு வருகிறது.   

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க