ஸ்ரீதேவி மறைவுக்குப் பின் கபூர் குடும்பத்தில் நடந்த முதல் நிகழ்ச்சி! - வைரலாகும் புகைப்படங்கள்

சோனம் கபூர் திருமண நிகழ்வையொட்டி, கபூர் வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது.  

சோனம் கபூர்

 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் தம்பியும் பாலிவுட் நடிகருமான அனில்கபூரின் மகள்தான் சோனம் கபூர். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சோனம் கபூர், தன் காதலர் ஆனந்த் அஹுஜாவை நாளை திருமணம் செய்து கொள்கிறார். ஆனந்த் அஹுஜா, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான அஹுஜாவின் பேரன். எனவே, திருமண நிகழ்வு மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடிகை ஸ்ரீதேவியின் மறைவால் சோனம் திருமண நிகழ்வை எளிமையான முறையில் நடத்த கபூர் குடும்பம் முடிவு செய்துள்ளது. மும்பையில் நாளை திருமணம் நடைபெறுகிறது. அஹுஜா டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால், டெல்லியிலும் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சோனம் கபூர்
 

இந்நிலையில் நேற்றிரவு மணப்பெண் சோனம் கபூருக்கு மும்பையில் மெகந்தி விழா நடந்தது. ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் எனக் கபூர் வீடு களைகட்டியது. ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி உற்சாகமாக நடனம் ஆடி அசத்தினர். மணப்பெண் சோனம் கபூருடன் அவரின் தங்கைகள் அன்ஷுலா, ஜான்வி, குஷி மற்றும் ஷனாயா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!