வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (09/05/2018)

கடைசி தொடர்பு:10:52 (09/05/2018)

`காலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..!

ரஜினிகாந்த் நடித்துள்ள `காலா’ படத்தின் பாடல்களை அதன் தயாரிப்பாளர் தனுஷ், இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், `காலா'. அந்தப் படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.  ஜூன் மாதம் 7-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'செம வெயிட்டு' என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி, மூன்று மில்லியன் வியூஸ்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், `காலா' படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி, இன்று மாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடக்க உள்ளது. அந்த விழாவில், படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைக்குழு, படத்தில் உள்ள பாடல்களை இசையமைத்துப் பாட இருக்கிறார்கள். இந்த நிலையில், 9 பாடல்கள் அடங்கிய தொகுப்பை தனுஷ், இணையத்தில் வெளியிட்டுள்ளார்.