Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

போயஸ் இல்லத்தில் மாவட்டச் செயலாளர்கள் 38 பேருடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

அரசியல் விவகாரம் தொடர்பாக, ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார். 

ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், 'அரசியல் பற்றி பேச நேரம் இன்னும் வரவில்லை. நேரம் வரும்போது பேசுவேன்' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையிலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் 38 பேர், போயஸ் தோட்டத்திலுள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை சந்தித்துள்ளனர். அவர்களுடன் அரசியல் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement