`இது மட்டும் எனக்குத் தெரியாது' - 49 வருட திரைப்பயண ரகசியத்தை வெளியிட்ட அமிதாப்

அமிதாப் பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தன் 49 வருட திரைப் பயணத்தில் இருந்த ஒரே ஒரு வீக்னஸை ரிவீல் செய்துள்ளார்.  

அமிதாப் பச்சன் மற்றும் ரிஷிகபூர் நடிப்பில் அண்மையில் வெளியான `102 நாட் அவுட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு, அமிதாப் - ரிஷிகபூர் இணையும் படம் என்பது இத்திரைப்படத்தின் கூடுதல் சிறப்பு. 102 வயதுடைய தந்தையாக அமிதாப் பச்சனும்  75 வயதான மகனாக ரிஷிகபூரும் அழகாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தந்தை - மகன் இடையேயான அன்பு, உறவு சிக்கல் உள்ளிட்டவை பற்றிதான் `102 நாட் அவுட்’ பேசுகிறது.

இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று மும்பையில் நடைபெற்றது. அமிதாப் பச்சன், ரிஷிகபூர், படத்தின் இயக்குநர் உமேஷ் சுக்லா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமிதாப் பதிலளித்தார். `நடிப்பு, தயாரிப்பு, பின்னணி  எனப் பாலிவுட்டில் ஆல் ரவுண்டராக வலம் வரும் அமிதாப் பச்சன் எப்போது இயக்குநர் ஆவார்’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமிதாப் பச்சன் ‘எனக்கு டைரக்‌ஷன் தெரியாது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் இயக்குநர் ஆக முடியாது. ஒவ்வொரு முறையும் இயக்குநர்கள் வைக்கும் கேமரா ஆங்கிள் குறித்து என் மனதில் பல்வேறு கேள்விகள் எழும்’ என்றார். 

 `திரைத்துறையில் அனுபவமிக்க நீங்கள், உங்களின் படங்கள் வெளியாகும்போது ரிலாக்ஸாக இருப்பீர்களா’ என்று ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமிதாப், `நிச்சயமாக இல்லை. அன்று முதல் இன்றுவரை என் படங்கள் வெளியாகும்போதும் பதற்றமாகத்தான் இருக்கும். மக்களுக்குப் பிடிக்குமா, படம் ஹிட்டாகுமா’ என்று பயந்துகொண்டிருப்பேன்’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!