Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• கொச்சியில் பிரமாண்டமான ஆறு பெட்ரூம் அபார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார் அசின். ''பெரிய பெரிய சொத்து வாங்குறதுலாம் எனக்குப் பிடிக்காது. ஆனா, இந்த வீடு கடற் கரைக்கு நேர் எதிரே இருக்கு. தூங்கி எழுந்ததும் கடலைப் பார்த்தாலே மனசு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதான் இந்த வீட்டை வாங்கினேன்!'' என்கிறார் அசின். இனி தினம் 'அலை’மார்னிங்தான்!  

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  அமெரிக்காவின் 'ரியாலிட்டி ஷோ’ பிரபல நடிகையான கிம் கர்டாஷியான் மணம் முடித்த 72 நாட்களிலேயே கணவர் ஹம்ப்ரீஸை விவாகரத்து செய்து 'புது சாதனை’ படைத்திருக்கிறார். 'தனது திருமணத்தை டி.வி-யில் ஒளிபரப்ப சேனல்களிடம் இருந்து பெற்ற கோடிக்கணக்கான டாலர்கள், திருமணத்துக்குக் குவிந்த பல கோடி  மதிப்பிலான பரிசுகள் ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டே அந்த பொம்மைத் திருமணத்தை அரங்கேற்றி இருக்கிறார் கிம்!’ எனக் கொடி பிடிக்கிறார்கள் பெண்கள் அமைப்பினர். வெச்ச மொய்யைத் திருப்பிக் கேக்குறாங்களோ?!  

•  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக், கார் ரேஸில் கல்லா கட்ட இருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொடுத்த உற்சாகத்தில் மோட்டார் சைக்கிள் லீக் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறார். 'ஐ1 சூப்பர் சீரிஸ்’ என்ற பெயரில் ஒன்பது நகரங்களில், ஒன்பது அணிகள் கொண்ட படை ஆகஸ்ட் மாதம் முதல் களம் இறங்குமாம். டாப் கியர் தட்டிக் கிளம்புங்க!

இன்பாக்ஸ்

•  நம்ம ஊர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸால் தெலுங்குப் பக்கம் பூகம்பம். '7 ஆம் அறிவு’ படத்தைப் பற்றிப் பேசும்போது சிரஞ்சீவி மகன்  ராம்சரண் தேஜா, 'முருகதாஸைப் போன்ற திறமையான இயக்குநர் தெலுங்கில் பிறக்காதது பெரிய துரதிருஷ் டம்!’ என்று கூறியது பாலகிருஷ்ணாவை உஷ்ணப்படுத்தியுள்ளது. ''தெலுங்கில் அப்படிப்பட்ட இயக்குநர்கள் நிறைய பேர் உள்ளனர். தேவை இல்லாமல் பேசினால் பல்லை உடைப்பேன்'' என்ற பாலகிருஷ் ணாவின் ஓப்பன் ஸ்டேட்மென்ட் பெரிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிரஞ்சீவியின் பதிலுக்காக மீடியா வெயிட்டிங். ரியல் ஆக்ஷன் சினிமா!

இன்பாக்ஸ்

•  நித்யா டுயல்லா... இந்திய மாடலிங் உலகின் சமீப சென்சேஷன். போஃபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டுவந்த பத்திரிகை யாளர் சித்ரா சுப்ரமணியத்தின் மகள். சுவிட்சர்லாந்து வாழ் இந்தியரான நித்யா இப்போது இந்திய ஃபேஷன் ஷோக்களில் பரபரப்பு ஃபிகர். இந்த ஆறடி உயர கேட் வாக் அழகிக்கு இந்தி, தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது லட்சியமாம். மோஸ்ட் வெல்கம்!

•  2018-ம் ஆண்டு காமென்வெல்த் போட்டிகளை நடத்தி சர்வதேச அரங்கில் மரியாதையான அங்கீகாரம் பெறத் துடிக் கிறது இலங்கையின் ராஜபக்ஷே அரசு. ஆனால், இலங்கையின் முயற்சிகளுக்கு ஆஸ்திரேலியா முட்டுக்கட்டை போடுகிறது. முத்தையா முரளிதரனை அங்கு தூதுவராக அனுப்பி சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறது இலங்கை அரசு. முத்தையா இது தப்பையா!

இன்பாக்ஸ்
##~##

•  ''கடாஃபியின் மகன் முத்தஸிம் என் முன்னால் காதலன். நானும் அவரும் நான்கு ஆண்டுகள் உயிருக்கு உயிராகக் காதலித்தோம்!'' - இத்தாலியின் முன்னணி மாடல் வனெஸ்ஸா ஹெஸ்லர் அளித்த இந்த 'மனம் திறந்த பேட்டி’ அவரது விளம்பர வாய்ப்புகள் அனைத்தையும் காலி செய்த தோடு, பல நிறுவனங்களின் விளம்பரத் தூதுவர் அந்தஸ்தையும் பறித்துக்கொண்டது. இதுக்குத்தான் கேமரா முன்னாடி மட்டும் மனசைத் திறக்கிறது!

•  அஜீத்துக்கு ஹீரோயின் செட் ஆகாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறது பில்லா-2 டீம். மாடல் ஹுமா குரேஷி, முன்னாள் இந்திய அழகி பார்வதி ஓமனக்குட்டன் என ஒவ்வோர் அழகியும் ரிஜெக்ட் ஆகிக்கொண்டே இருக் கிறார்கள். 'தல’சிறந்த அழகியைப் புடிச்சுப் போடுங்க!

இன்பாக்ஸ்

•  தெலுங்கு சினிமாவில் குவியும் வாய்ப்புகளுக்குப் போட்டியாக சர்ச்சை செய்திகளில் சிக்கித் தவிக்கிறார் சமந்தா. 'சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திவிட்டார்’ என்று கிளம்பிய சர்ச்சை அடங்குவதற்குள், போட்டோ ஷூட்டின்போது உதவியாளரின் கன்னத்தில் அறைந்துவிட்டார் என அடுத்த பரபரப்பைப் பற்றவைத்துவிட்டது மீடியா. சமாதானமா போ சமந்தா!

•  ஜம்மு காஷ்மீர் முழுக்க பாகிஸ்தான் எல்லையில் இருப்பதாகவும் அருணாச்சலப் பிரதேசம் முழுக்க சீனாவுக்கு உட்பட்டதாகவும் வரைபடம் வெளியிட்டிருக்கிறது சீன நிறுவனம் ஒன்று. தவறான வரைபடம் குறித்து சீன தூதர் ஷாங் யானிடம் விளக்கம் கேட்ட இந்தியப் பத்திரிகையாளரிடம் 'ஷட் அப்’ என்று கடுப்படித்திருக்கிறார். உடனடியாக பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்க, ''இந்தியா-சீனா இரு நாடுகளும் எல்லைப் பிரச்னை குறித்து சுமுகமாகப் பேசித் தீர்க்கும்!'' என்று அடங்கி ஒடுங்கியிருக்கிறார். போதி தர்மன் வாரிசுகளை சீனாவுக்கு அனுப்புங்கப்பா!  

இன்பாக்ஸ்

•  பெண் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேசப் பெண்கள் அமைப்பின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் முதல் இந்தியராக இணைந்திருக்கிறார் நந்திதா தாஸ். 'தனது திறமையான நடிப்பால் பெண் களின் அவலமான வாழ்வியல் சூழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்’ என்பது அவருக்கான புகழாரம். ஆயிரத்தில் ஒருத்தி!

•  'ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட 2011-ம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டிய லில் ஒபாமாவுக்குத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம்! அடுத்தடுத்து, ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஹூ ஜின்டாவோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா, போப் 16-ம் பெனடிக்ட் ஆகியோர் இடம்பிடித்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 11-வது இடம். 19-ல் பிரதமர் மன்மோகன் சிங். மௌனமா இருந்தாலும் மதிப்பாங்களோ?  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism