Published:Updated:

11-11-11ல என்ன பண்ணப் போறீங்க?

இர.ப்ரீத்தி

##~##

11-11-11... இந்த வருடத்தின் மிக ஸ்பெஷல் தேதி! 'அன்றுதான் ஐஸ்வர்யா ராய் குழந்தை பெறவிருக்கிறார்’ என்பதில் தொடங்கி, ஏகப்பட்ட திருமணங்கள், பட வெளியீடுகள், உல்லாச சுற்றுப் பயணங்கள் என்று உலகமே உற்சாக உதறலில் திரிகிறது. 'நீங்கள் அந்த நாளில் என்ன செய்யவிருக்கிறீர்கள்?’ என்று இவர்களிடம் கேட்டோம்...

 த்ரிஷா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சரியா அன்னைக்குத்தான் நான் நடிக்கும் ஒரு சோப்பு விளம்பர ஷூட்டிங் முடியும். அதனால, அப்போ நான் மும்பையில் இருப்பேன். முடிஞ்சா சென்னைக்குப் பறந்து வந்துருவேன். முடியலைன்னா, அம்மாவை மும்பைக்கு வரவெச்சு, ஷபீனாவோட சேர்ந்து அந்த நாளைக் கொண்டாடுவேன். ஷபீனா என் பெஸ்ட் ஃப்ரெண்ட். பாலிவுட் ஹீரோக்கள் நிறைய பேருக்கு ஷபீனாதான் காஸ்ட்யூம் டிசைனர். இப்போ நம்ம சூர்யாவுக்கும் அவதான் காஸ்ட்யூம் டிசைனர்!''

மதன் கார்க்கி

''பொதுவா இந்த மாதிரி டேட்ஸ் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். சின்ன வயசுல இருந்தே ஏதாவது வித்தியாசமான தேதிகள் பார்த்தா மனசுல குறிச்சுப்பேன். கண்ணுக்குத் தெரியுற மாதிரி எங்கேயாவது கிறுக்கிவெச்சுப்பேன். நான் முதன்முதலா பாட்டு எழுதின 'எந்திரன்’ படம் ரிலீஸ் ஆனது 01.10.10. அந்த அளவுக்கு என் வாழ்க்கைல நம்பர் விளையாடும். ஆஸ்திரேலியாவில் என் நண்பர் ஒருத்தர் இருக்கார். அவர் எப்போ மணி பார்த்தாலும் 11.11னுதான் காமிக்கும். அதனால அந்த நம்பர்ன்னாலே மனுஷன் டெரர் ஆவார். 11-11-11 அன்னைக்கு சரியா 11.11 மணிக்கு அவருக்கு போன் பண்ணி வாழ்த்துச் சொல்லி பயமுறுத்தலாம்னு ஐடியா!''

11-11-11ல என்ன பண்ணப் போறீங்க?

எஸ்.ராமகிருஷ்ணன்

''நீங்க சொல்லித்தான் அந்த நாள்பத்தியே எனக்குத் தெரியுது. விசேஷங்கள், பண்டிகைகள் மேலயே விருப்பம் இல்லாதவன் நான். 24 மணி நேரத்துக்கு ஒரு மணி நேரம் அதிகமா கிடைச்சா, என்னைப் பொறுத்தவரை அதுதான் விசேஷமான நாள். எனக்குன்னு ஒரு உலகம் இருக்கு. அதில் இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் இடம் இல்லை!''

திவ்யா

''பாவிங்க... என்னோட ஒரு ஃப்ரெண்ட்கூட இதை எனக்கு ஞாபகப்படுத்தலை. என்னங்க இது அநியாயம்... அப்புறம் எதுக்குங்க அவங்க ஃப்ரெண்ட்ஷிப்லாம்? அந்த நாள் தெலுங்குப் படத்தில் நான் பாடின பாட்டு ரிலீஸ் ஆகுது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்க நான் ஹைதராபாத்ல இருப்பேன். சொல்லிட்டீங்கள்ல... நான் ஏதாவது அமர்க்களம் அரேஞ்ச் பண்றேன்!''

தா.பாண்டியன்

''அட! ஆமாங்க... 100 வருஷத்துக்கு ஒரு தடவை வர்ற நாளுனு சொல்லிக்கிட்டுத் திரியுறாங்க.

வரலாற்றின் எந்தப் பக்கத்துல இதையெல்லாம் பொறிச்சுவெச்சிருக்காங்கன்னு தெரியலை. தினமும் தினுசு தினுசா கிளப்பிவிடுறாங்க. இளந்தாரிகளுக்களுக்காக வேணும்னா நாமளும் அந்த நாள்ல வாழ்த்துச் சொல்லிக்கலாம். அன்னைக்கு யாரு என் கண்ணுல மொதல்ல சிக்குறாங்களோ அவங்களுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லிக்கலாம்.       அவ்வளவுதான்!''

தாமரை

''என்ன தேதி... 11-11-11ஆ...? என் பிறந்த நாள் அதுக்கு முந்தைய நாள். பத்தாம் தேதி. பொதுவா, எல்லாருமே அவங்க பிறந்த நாளைக் கோலாகலமா கொண்டாடுவாங்க. ஆனா, அந்த நாளையே நான் சாதாரணமா கடந்துபோவேன். மத்தபடி 100 வருஷத்துக்கு ஒரு தடவை வருதுன்னுலாம் அந்த நாளைக் கொண்டாட முடியாது. அப்படிப் பார்த்தா நாம வாழ்ற ஒவ்வொரு நாளுமே 100 வருஷத்துக்கு ஒரு தடவைதான் வரும்!''

சின்மயி

''என்னங்க நீங்களும் கேக்குறீங்க? எங்கே திரும்பினாலும் இதைப் பத்தியே பேசிட்டு இருக்காங்க. 'ஹேப்பி பேய் பிசாசு டே’னு எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அமெரிக்காவின் 'ஹாலோவீன் டே’யை அப்படித் தமிழ்ப்படுத்திக் கொண்டாடுறாங்களாம். எப்படிலாம் நேரத்தை வீணாக்கிட்டு இருக்காங்க? இன்னும் கொஞ்ச நாள்ல ஸ்கூல்ல இந்தக் கொண்டாட்டம்லாம் கட்டாயம்னு சொல்லி டிரெஸ், சார்ட், அது இதுனு வாங்கிட்டு வரச் சொல்லி நம்ம உயிரை எடுப்பாங்கபோல. நான் எஸ்கேப்!''