வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2018)

கடைசி தொடர்பு:08:39 (01/06/2018)

அதர்வாவின் '100' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த 'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ஆகிய படங்களை இயக்கிய சாம் அண்டன் இயக்கி வரும் படம், '100'. இதில் போலீஸ் அதிகாரியாக அதர்வாவும் அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

அதர்வா

மேலும், யோகி பாபு, 'எரும சாணி' புகழ் ஹரிஜா ஆகியோர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர். ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்திற்குப் பிறகு அதர்வா நடிப்பில் இன்னும் படங்கள் வெளியாகவில்லை. ஆனால், 'இமைக்கா நொடிகள்', 'செம போத ஆகாதே', 'பூமராங்', 'ஒத்தைக்கு ஒத்த' ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். போலீஸ் சம்பந்தப்பட்ட கதை என்பதாலும், அதர்வா - ஹன்சிகா ஜோடி முதன்முறையாகச் சேர்ந்திருப்பதாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க