பாகுபலிக்கு பிறகு தமன்னாவின் அடுத்த பிரம்மாண்டம்.!

சிரஞ்சீவி நடிக்கும் அடுத்தப் படமான 'சை ரா நரசிம்ம ரெட்டி' படத்தில் தமன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த ரோலுக்காக இவர் பரதநாட்டியம் பயின்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'ஸ்கெட்ச்' படத்துக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் வங்கி அதிகாரியாக இவர் நடித்திருக்கிறார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. மேலும், 'சை ரா நரசிம்ம ரெட்டி' படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகவிருக்கிறது. 

தமன்னா

இந்தப் படத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், அமிதாப் பச்சன் இதில் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ராம் சரண் தயாரிக்க, சுரேந்தர் ரெட்டி இயக்கவிருக்கிறார். 'உய்யாலவடா நரசிம்ம ரெட்டி'யின் வாழ்கையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் 150 கோடி ருபாய் செலவில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!