`நீங்க இப்போ இருந்தே தேவதைதான்' - பரியேறும் பெருமாள் டீஸர்

பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பரியேறும் பெருமாள் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்கள் மூலம் சிறந்த இயக்குநராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்ட பா.இரஞ்சித், தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். தனது `நீலம்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக  `பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரித்துள்ளார் ரஞ்சித். இப்படத்தை அறிமுக இயக்குநர்  மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். இதில் கதிர் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாகக் `கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார். 

 

 

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது. கதிர் இதில் சட்டக்கல்லூரி மாணவராக நடித்துள்ளார். சட்டக்கல்லூரிகளில் நிகழும் பிரச்னைகளை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சந்தோஷ் நாராயணின் மயக்கும் பின்னணி இசை, காதல் காட்சிகள், தூத்துக்குடி மண் வாசம் என டீஸர் அசத்துகிறது. ரசிகர்களிடம் தற்போது இந்த டீஸர் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!