வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (05/06/2018)

இது ட்ரான்ஸ்ஃபார்மர்ஸின் முன்கதை.. ஜான்சீனா நடிப்பில் `பம்பில்பீ' படத்தின் டீசர்! #Bumblebee

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் முதல் படத்துக்கு இருபது வருடங்களுக்கு முன் நடக்கும் இந்தக் கதையில் பம்பில்பீ' இந்த உலகத்துக்கு வந்தது முதல் நடக்கும் சம்பவங்களை படமாக்கியிருக்கிறார்கள்.

திரடி இயக்குநர் மைக்கல் பே (Micheal Bay) இயக்கத்தில் வெளிவந்து இந்தியாவில் பெரிதும் பேசப்பட்ட ஹாலிவுட் படத்தொடர் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் (Transformers). அசரடிக்கும் இயந்திரங்கள், வாகனங்களாக உருமாறும் ஏலியன்கள் என சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களிலேயே வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் இருந்ததால், பலருக்கும் மிகவும் பிடித்தமான படமாகிப் போனது. முதல் இரண்டு பாகங்கள் அதிரிபுதிரி வெற்றிபெற தொடர்ந்து ட்ரான்ஸ்பார்மர்ஸ் படங்கள் வெளிவரத் தொடங்கின. `பம்பில்பீ' (Bumblebee), `ஆப்டிமஸ் ப்ரைம்' (Optimus Prime), `மெகட்ரான்' (Megatron) என அதில் பல கதாபாத்திரங்கள் குழந்தைகளின் ஃபேவரைட் ஆனது.

Bumblebee

படத்தைத்  தயாரித்துக்கொண்டிருக்கும் பேரமவுன்ட் (Paramount) நிறுவனத்துக்கு ஓர் ஆசை. ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடர் மூலம் மார்வல் மற்றும் DC காமிக்ஸ்கள் தற்போது உருவாக்கியிருக்கும் யுனிவர்ஸ்கள் போல தானும் ஒரு ஷேர்ட் யுனிவர்ஸ் உருவாக வேண்டும் என்று. அதன் காரணமாக ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் முதல் ட்ரைலாஜி முடிந்தவுடன் மொத்தமாக வேறு நடிகர்களை வைத்து `Age of Extinction' மற்றும் `The Last Knight' படங்களை எடுத்தது. இப்போது அடுத்த பாய்ச்சலாக ஹிட்டடித்த `பம்பில்பீ'' (Bumblebee) கதாபாத்திரத்தின் முன்கதையை ஒரு தனிப்படமாக எடுத்திருக்கிறார்கள். ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் முதல் படத்துக்கு இருபது வருடங்களுக்கு முன் நடக்கும் இந்தக் கதையில் பம்பில்பீ' இந்த உலகத்துக்கு வந்தது முதல் நடக்கும் சம்பவங்களை படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் டீசரை கீழே காண்க. படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகிறது.

 

``ஒரு டிரைவர் எப்போதும் தன் காரைத் தேர்ந்தெடுப்பது இல்லை. கார்தான் தன் டிரைவரைத் தேர்ந்தெடுக்கிறது" என்ற வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த டீசர் மூலம் படத்தில் 18 வயதான சார்லி வாட்சன் (Hailee Steinfeld) முதன்மையான கதாபாத்திரம் என்று தெரிகிறது. அது மட்டுமன்றி, படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் WWE வீரர் ஜான்சீனா நடித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க