`கியாரே ப்ளாக்பஸ்டரா!' - காலாவுக்குப் பிரபலங்கள் வாழ்த்து #Kaala

`காலா' திரைப்படத்தைக் காண ஆவலாக உள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் சமூகவலைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.

`காலா' திரைப்படத்தைக் காண ஆவலாக உள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் சமூகவலைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.

காலா

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `காலா' திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. திரையரங்குகளில் காலை முதலே கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேல தாளங்களுடனும் உற்சாகமாக காலா படத்தைக் கொண்டாடிவருகின்றனர். ரசிகர் மட்டுமன்றி திரைப்பிரபலங்களிடேயும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள `காலா' குறித்து திரைத்துறையைச் சேர்ந்த பலர் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

`காலா' திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான், தான் ரஜினியின் தீவிர ரசிகன் என்றும் காலா படத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது எனவும் பதிவிட்டுள்ளார். `சிங்கத்தின் பாதையை உருவாக்குவோம்' என நடிகர் ஆர்யா தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் வைபவ் தனது ட்விட்டரில், உலகம் முழுவதிலிருந்தும் காலாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது;  காலாவை இனியும் பார்க்காமல் இருக்கமுடியாது, என ஆர்வத்துடன் பதிவிட்டுள்ளார். `காலா வெற்றிப்படமாக அமையும் , படக்குழுவினருக்கு வாழ்த்துகள்' என்று நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட் செய்துள்ளார். குணச்சித்திர நடிகர் சதிஷ், தனது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  

அதேபோல இசையமைப்பாளர் அனிருத் `காலா' படத்துக்கே உரித்தான பாணியில் `கியாரே ப்ளாக்பஸ்டரா' என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குநர்கள் வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், பிரியதர்ஷன் உள்ளிட்டோரும் ட்விட்டரில் காலா படத்துக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

காலா விமர்சனம் இங்கே

Do you like the story?

Please Appreciate the Author by clapping!