வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (08/06/2018)

கடைசி தொடர்பு:19:38 (08/06/2018)

`ஜூன் 11-ல் விஸ்வரூபம்-2 டிரெய்லர்!’ - ஆகஸ்ட் 10-ல் படம் ரிலீஸ்?

கமல்ஹாசனின் விஸ்வரூபம் -2 படத்தின் டிரெய்லர் ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஸ்வரூபம் - 2

கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் விஸ்வரூபம் - 2 படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படத்துக்கான வேலைகள் பாதியில் நின்றன. விஸ்வரூபம் -2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடிகர் கமல் சமீபத்தில் தொடங்கி முடித்தார். சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமலுடன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன்ஸ் வேலைகள் நடந்து வந்தன.

விஸ்வரூபம் - 2

இந்தநிலையில், விஸ்வரூபம் - 2 படத்தின் டிரெய்லர் வரும் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிரெய்லரின் தமிழ்ப் பதிப்பை ஸ்ருதி ஹாசனும், இந்திப் பதிப்பை அமீர் கானும், தெலுங்குப் பதிப்பினை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிடுகின்றனர். படம் ஆகஸ்ட் 10-ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.