கரிகாலனின் தார் ஜீப்... செல்ல நாய் மணி..! - இவற்றின் மவுசு தெரியுமா? # KaalaFever 

`காலா’ படத்தின் போஸ்டரில் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருந்த ஜீப்பை வாங்கிவிட்டதாக மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.

காலா
 

மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, தன் நிறுவனத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கார்கள், தன் நிறுவனம் தொடர்புடைய பொருள்கள் உள்ளிட்டவற்றைச் சேகரித்து வருகிறார். அவை அனைத்தும் மகேந்திரா நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் (Mahindra Research Valley) வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா சிட்டியில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்துக்குப் புது வரவாக வந்திறங்கியுள்ளது காலா ஜீப். காலா படத்தில் கரிகாலன் கெத்தாகப் பயணித்த அந்த ஜீப் மகேந்திரா தார் ரகத்தைச் சேர்ந்தது.

கடந்த ஆண்டு காலா போஸ்டர்கள் வெளியான சமயத்தில் ரஜினி அமர்ந்திருந்த ஜீப்பும் அவர் அருகில் நின்றுகொண்டிருந்த நாயும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. காலா ஜீப்பை தன் அருங்காட்சியகத்துக்குத் தருமாறு போஸ்டர் வெளியானபோதே ஆனந்த் மகேந்திரா தனுஷிடம் கேட்டிருந்தார். ஆனந்த் மகேந்திராவின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். 

காலா
 

 `காலா ஜீப் எங்கள் மகேந்திரா அருங்காட்சியகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. ஜீப் அருகே நின்று தலைவர் போஸ் கொடுக்கும்படி என் ஊழியர்களிடம் கேட்டதற்கு அவர்கள் செய்த சேட்டையைப் பாருங்கள்’ என்று ஆனந்த் மகேந்திரா ட்வீட் செய்துள்ளார். மேலும், காலா ஜீப் வரும் ஞாயிறுவரை ரஜினி ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள சத்யம் திரையரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, மீண்டும் மகேந்திரா அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

காலா 
 

இதே போன்று, காலா படத்தின் போஸ்டரிலும் படத்தில் ஓரிரு காட்சிகளிலும் இடம்பெற்ற `மணி’ என்றழைக்கப்படும் நாய் 2 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காலா படப்பிடிப்பின்போது ரஜினியுடன் மணி பாசமாகப் பழகியுள்ளது.  மணி, சைமன் என்பவருக்குச் சொந்தமான நாய். 2 கோடி ரூபாய்க்கு விலைபேசியும் ரஜினி ரசிகர்களுக்கு தன் நாயைத் தர சைமன் மறுத்துவிட்டாராம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!