வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (11/06/2018)

கடைசி தொடர்பு:10:10 (11/06/2018)

ராஜுமுருகன் இயக்கும் 'ஜிப்ஸி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

ஜோக்கர் இயக்குநரின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமாவில், சமீபகாலத்தில் மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய படம், ராஜுமுருகன் இயக்கிய 'ஜோக்கர்'. இப்படத்தைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கும் அடுத்த படத்துக்கு, 'ஜிப்ஸி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.

ஜிப்ஸி | Gypsi | ராஜுமுருகன்

படத்தில், ஜீவா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சல்பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார். இவர், பாலிவுட்டில் விளம்பரப் படங்களிலும் டி.வி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். 'குக்கூ'  படத்தை அடுத்து மீண்டும் ராஜுமுருகனுடன் இசையமைப்பாளராகக் களமிறங்குகிறார் சந்தோஷ் நாராயணன். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, 'அருவி' படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்ட ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, இப்படத்தை எடிட் செய்கிறார். நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு இளைஞனின் காதல் கதையாக இருக்கக்கூடும் என ஊகிக்கவைக்கிறது 'ஜிப்ஸி'யின் ஃபர்ஸ்ட் லுக். 

ஜிப்ஸி | Gypsy

ஜீவாவின் நடிப்பில், 'கீ' ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இதேபோல 'கொரில்லா' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.