சாய்ராட் ரீமேக்! ஸ்ரீதேவி மகள் நடிக்கும் படத்தின் டிரெய்லர் #Dhadak

மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அறிமுகமாகியிருக்கும் 'தடாக்' படத்தின் ட்ரெய்லர், இன்று இணையத்தில் வெளியானது. 

ஜான்வி கபூர்

நடிகை ஶ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஜான்வி கபூர், 'தடாக்' படத்தில் அறிமுகமாகிறார். மராத்தியில் ரிலீஸாகி ஹிட் அடித்த 'சாய்ராட்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை கரண் ஜோகர் தயாரித்திருக்கிறார். ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாய்ராட் படம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தில் ஆர்ச்சியாக நடித்த ரிங்குவுக்கு, இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவானார்கள். நாகராஜ் மஞ்சுலே இயக்கிய சாய்ராட் ஏற்கெனவே கன்னடம், ஒரியா, பஞ்சாபி, பெங்காலி ஆகிய நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது.

படத்தின் ஹீரோவாக ஷாகித் கபூரின் உறவினர் இஷான் காதர் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாயிருந்தார் இஷான்.   ஶ்ரீதேவியின் இறப்புக்குப் பிறகு இந்தப் படம் ரிலீஸாகி இருப்பதாலும், ஜான்வி கபூரின் முதல் படமாக இருப்பதாலும், இந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர். சாய்ராட் படத்தின் இசையமைப்பாளர்கள் அஜய்-அதுல் தான், தடாக் படத்துக்கும் இசை.  படம் ஜூலை மாதம் வெளியாகயிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!