`இதுதான் க்ளைமாக்ஸ்!’ - அமைச்சர் ஜெயக்குமார் வசனத்துடன் ஆர்.கே நகர் ட்ரெய்லர்

ஆர்.கே நகர்


வைபவ், சம்பத், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்க, `வடகறி' படத்தின் இயக்குநர் சரவண ராஜன் இயக்கும் படம் `ஆர்.கே நகர்.’ இயக்குநர் வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் டீசர் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் இன்று ஆர்.கே நகர் படத்தின் ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார். 

ட்ரெய்லரின் தொடக்கத்தில் வரும் ஆர்.கே.நகர் தேர்தலின் ரியல் காட்சிகள், படம் பக்கா அரசியல் படம் எனச் சொல்ல வந்து பின்னர், கமெர்சியல் படமாக ட்ரெய்லர் பயணம் ஆகிறது. தொடக்கத்தில் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், விஷால், சீமான் எனத் தொடங்கும் ட்ரெய்லரின் இறுதியில் வரும் அமைச்சர் ஜெயக்குமாரின் க்ளைமாக்ஸ் வசனம் வரை அட்டகாசம். ட்ரெய்லருடன் அனிருத் இந்தப் படத்தின் பாடலையும் வெளியிட்டார்.  

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!