வெளியிடப்பட்ட நேரம்: 06:06 (12/06/2018)

கடைசி தொடர்பு:11:01 (12/06/2018)

வரவேற்பைப் பெறும் சந்தீப் சிங்கின் பயோபிக் `சூர்மா'..!

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படமான `சூர்மா' ட்ரைலர், நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

சூர்மா


பயோபிக் படங்களின் சீசனான தற்போது, தொடர்ந்து பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுவருகின்றன. `சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்',  `எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி',  `பேட் மேன்',  `மகாநதி' போன்ற பயோபிக் திரைப்படங்கள் வெற்றிபெற்றுள்ளன. அந்தவகையில் தற்போது, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுவருகிறது. இந்திய ஹாக்கி அணியின் முக்கிய வீரர்களில் இவரும் ஒருவர். படிப்படியாகத் தனது திறமையால் இந்திய அணியின் கேப்டன் வாய்ப்பைப் பெற்றார். 20ந்ம் ஆண்டு, டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு சந்தீப் முக்கிய காரணம். பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்குவதில் வல்லவரான சந்தீப், பஞ்சாப் மாநிலத்தில் டிஎஸ்பியாகவும் பணியாற்றிவருகிறார். 

இதற்கிடையே, சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாறு,  `சூர்மா' என்ற பெயரில் உருவாகிறது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்காக தில்ஜித் தோசங் நடித்துள்ளார்.  இயக்குநர் ஷாத் அலி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் டாப்ஸி, அங்கத் பேடியும் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் நேற்றுமுன்தினம் வெளியான நிலையில், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதைப் பார்த்துள்ளனர். இப்படம் ஜூலை 13-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க