ரஜினியை நடிக்கவைக்கலாம்னு நினைச்சேன். ஆனா... - ஆடியோ விழாவில் கலகலத்த இயக்குநர் ஷங்கர்!

இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர்  நடிப்பில் விக்கி இயக்கியுள்ள திரைப்படம், 'டிராஃபிக் ராமசாமி'. இதில், டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.   

ஷங்கர்

இதில், எஸ் ஏ. சந்திரசேகரிடம் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் ஷங்கர், பொன்ராம், ராஜேஷ் என முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர்  ``நிஜ வாழக்கையில் டிராஃபிக் ராமசாமி ஒரு இன்ஸ்பையரிங்கான கேரக்டர். யார் விதிகளை மீறினாலும், அதை எதிர்த்து தட்டிக் கேட்கிற, போராடுற ஆள்தான் அவர். அவரைப் பத்தின செய்திகளைப் படிக்கும்போது ஆச்சர்யமா இருக்கும்; ஒரு ஹீரோயிசம் இருக்கும். படிக்கும்போது, மனசுக்குள்ள நிறையத் தடவை கை தட்டிருக்கேன். இந்த மாதிரி ஒரு இன்ஸ்பயரிங்கான ஆளை வெச்சி ஒரு படமாவது எடுத்துறனும்னு ஆசைப்பட்டேன்.

ஷங்கர்

 டிராஃபிக் ராமசாமி கதாப்பாத்திரம் கத்திய எடுக்காத ஒரு 'இந்தியன்' தாத்தா, வயசான ஒரு 'அந்நியன்'ல வர்ற அம்பிதான். இப்படி ரொம்ப இன்ஸ்பயரிங்கான இவர் கதையை ஒரு தடவ ரஜினி சாரை வச்சிகூட எடுக்கலாம்னு யோசிச்சேன். வயசுக்கேத்த கதாபாத்திரங்கள் பண்றதுக்கு இது கரெக்டா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, வட போச்சேங்கிறமாதிரி இந்தப் படத்த எஸ்.ஏ.சி சார் நடிக்குறாங்கனு அறிவிப்பு வந்துச்சு. எஸ்.ஏ.சி சார் இந்த கதாப்பாத்திரத்துக்கு ரொம்பப் பொருத்தமானவர். அவர், இந்த சமுதாயத்து மேல நிறைய கோவமாயிருப்பவர். அவர்கூட இருந்ததுனால இது எனக்குத் தெரியும். அந்தக் கோபம் எனக்கும் கொஞ்சம் ஒட்டிக்குச்சு" என்றார்  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!