வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (12/06/2018)

கடைசி தொடர்பு:15:59 (12/06/2018)

போலீஸ் கெட்டப்; தாடியை எடுத்தார் பிரபுதேவா..!

`மெர்க்குரி’ படத்தைத் தொடர்ந்து `சார்லி சாப்ளின் 2’, `யங் மங் சங்’, `லக்ஷ்மி’ என மூன்று படங்கள் பிரபுதேவாவின் கைவசம் இருக்கின்றன. இந்நிலையில், பிரபு தேவா முதன்முதலில் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதை, பிரபுதேவாவிடம், `வில்லு’, `போக்கிரி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக இருந்த ஏ.சி முகில் இயக்க இமான் இசையமைக்கிறார். 

பிரபுதேவா

இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இவரைத் தொடர்ந்து, இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ஆகியோர் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. முதல் காட்சியாக ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதை ஸ்டன்ட் மாஸ்டர் அன்பரிவ் இயக்குகிறார். எப்போதும் தாடியுடனே இருக்கும் பிரபுதேவா இந்தப் படத்துக்கு க்ளீன் ஷேவ் லுக்கில் இருக்கிறார். படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க