தல 58, தளபதி 62 வரிசையில் டிரெண்டிங் ஆன #நயன் 63

'அறம்' படத்தைத் தொடர்ந்து 'கோலமாவு கோகிலா', விசுவாசம் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தனது அடுத்த படமான #நயன்63 படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார். லக்‌ஷ்மி , மா என யூடியுப்பை கலக்கிய குறும்படங்களை இயக்கிய கேஎம் சர்ஜுன்  இப்படத்தை இயக்குகிறார். பெரிய ஹீரோக்களுடன் கதாநாகியாகயாகவும், தனித்து  நிற்கும் பெண் கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா கடந்த 15 வருடங்களாகத்  தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில்  உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.

நயன்63

 

மாயா, டோரா வரிசையில் இந்தப் படமும் ஒரு ஹாரர் அட்வெஞ்சர் ஜானரில் தயாராகவுள்ளது. அஜித், விஜய் படங்களுக்குப் பெயர் வைக்கும் முன்னர் ஹேஷ் டேக்குகளாக அவர்களின் பெயர்களுடன் படத்தின் வரிசை எண்ணும் சேர்த்து #தல58, #தளபதி62 எனப் பதியப்படும். அந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் இடம்பிடித்துள்ளார். சர்ஜுன் இயக்கத்தில் நடிக்கவுள்ள இப்படத்திற்குப் பெயர் இன்னும் வைக்கப்படாத நிலையில் இப்படத்தினை #Nayan63 எனச் சமூக வலைத்தளங்களில் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் #Nayan63 அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முன்னின்றதும் குறிப்பிடத்தக்கது. நயன்தாரா இப்படத்தில் ஒரு பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!