Published:Updated:

அசாபோடிடா இல்லாத சாம்பாரா?

கே.ராஜாதிருவேங்கடம்

அசாபோடிடா இல்லாத சாம்பாரா?

கே.ராஜாதிருவேங்கடம்

Published:Updated:
##~##

''இதெல்லாம் பொது அறிவு இருக்கிறவங்ககிட்ட கேட்கணும் தம்பி. சரி கேளுங்க...'' - தயக்கத்தோடு வணிகர் சங்கங்களின் பேரவை வெள்ளையன்.

 ''எனக்கு அந்த அளவுக்கு எதுவும் சொல்லத் தெரியாது. முயற்சி பண்றேன்'' - அடக்கத்தோடு ஓவியர் ம.செ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எந்த மாதிரி கேள்வி கேட்பீங்க? நான் பயப்படாத மாதிரி பார்த்துக் கேளுங்க...'' - கொஞ்சலாக ஷகிலா.

''மும்பையில் ஷாப்பிங்ல இருக்கேன். இப்பவே பதில் சொல்லணுமா?'' - எச்சரிக்கையோடு நதியா.

''ஹா...ஹா... எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வருது... என்னையும் ஒரு ஆளுனு மதிச்சு ஜி.கே. கொஸ்டீன்ஸ் கேக்க வந்திருக்கீங்க... ஹா... ஹா!'' - உற்சாக உதறலோடு கல்யாணி.

மதுரை ஆதீனத்தின் முழுப் பெயர் என்ன?

விடை: மதுரை ஆதீனம் லோக குரு 292-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சார்ய ஸ்வாமிகள்!

அசாபோடிடா இல்லாத சாம்பாரா?

வெள்ளையன்: ''யாரு..? மதுரை ஆதீனமா? அப்போ அது அவரோட பேரு இல்லையா?''

ம.செ.: ''எந்த ஒரு விஷயத்தையும் நாம தேடி அலையும்போதுதான் அதைப்பத்தி முழுசாத் தெரிஞ்சுக்குவோம். ஆதீனத்தைப் பத்தி எனக்கு எந்தத் தேடலும் இதுவரை வரவே இல்லை.''

ஷகிலா: ''யாருங்க அவரு..? எனக்குச் சம்பந்தமே இல்லாத கேள்வி இது!''

நதியா: ''ஸாரி... மதுரை ஆதீனமா? ஹூ இஸ் தட்?''

கல்யாணி: ''அடடா... முதல் கேள்வியிலயே நான் அவுட்டா?''

சமீபத்தில் எத்தனையாவது முறை தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது?

விடை: மூன்றாவது முறை!

வெள்ளையன்: ''முதல்ல ஒருத்தரு செத்தாரு. அது முதல் தடவை. இரண்டாவது ஒருத்தரு செத்தாரு. இப்போ ஒரு தடவை மாத்தியிருக்காங்க. அப்படின்னா மூணு!''

ம.செ.: ''நீங்க கேட்கிறதைப் பார்த்தா நான் ஃபெயிலாயிடுவேன்போல இருக்கே! எப்போ மாத்தினாங்க? எதுக்காக மாத்தினாங்க?''

ஷகிலா: ''அந்தப் பக்கம் நான் தலை வெச்சுகூடப் படுக்கிறது கிடையாது. ஆளை விடுங்க சாமி!''

நதியா: ''மினிஸ்டர்ஸ் சேஞ்ச் பண்ணியது தேர்டு டைம். கரெக்ட்!''

கல்யாணி: ''கேள்வியை இங்கிலீஷ்ல கேளுங்க!''  

ரொம்ப சின்ஸியராக ஆங்கிலத்தில் கேட்டவுடன் குபுக்கெனச் சிரித்தவர், ''நீங்க இங்கிலீஷ்ல கேட்டா மட்டும் எனக்கு ஆன்ஸர் தெரிஞ்சுடுமா என்ன? நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்!'' என்று காமெடி செய்தார்.

சமீபத்திய டெபிட்/கிரெடிட் கார்டு கொள்ளை களில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு கார்டு உரிமையாளரும் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்சப் பாதுகாப்பு நடவடிக்கை என்ன?

விடை: கார்டு பின் நம்பரை உடனடியாக மாற்ற வேண்டும்!

வெள்ளையன்: ''அப்படி ஏதாவது சொன்னாங்களா? எப்படி நான் கவனிக்காமவிட்டேன்?''

ம.செ.: ''அதெல்லாம் அந்த கார்டைப் பயன்படுத்துறவங்களோட கவலை. எனக்கு எந்த கார்டும் கிடையாது. இன்னமும் பேங்க் போய் சீட்டு எழுதிக் கொடுத்துப் பணம் எடுக்கிற ஆள் நான்!''

ஷகிலா: ''என்கிட்ட எந்த கார்டும் கிடையாது. பணத்தை வாங்கினா, வீட்லயே வெச்சிக்குவேன். அதுதான் நமக்கு சேஃப்ட்டி.''

நதியா: ''சீக்ரெட் நம்பர் சேஞ்ச் பண்ணச் சொன்னாங்க... அதானே!''

கல்யாணி: ''பேங்க்ல அப்படி ஏதும் சொன்னாங்களா என்ன? லெட்டர் எதுவும் வந்துச்சா? எனக்குத் தெரியலையே!''

அசாபோடிடா இல்லாத சாம்பாரா?

பவர் ஸ்டார் சீனிவாசன் பல கெட்டப்களில் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படத்தின் பெயர் என்ன?

விடை: ஆனந்தத் தொல்லை!

வெள்ளையன்: ''யாருங்க அது? எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சூப்பர் ஸ்டார் மட்டும்தான்!''

ம.செ.: ''நம்ம ஊரு நடிகராங்க அவரு? நீங்க சொல்றவரைப்பத்தி எனக்குத் தெரியலை.''

ஷகிலா: ''யாரு... நம்ம டாக்டரா? 'ஆனந்தத் தொல்லை.’ அடுத்த படத்துல எனக்கும் வாய்ப்பு கொடுக்கிறதாச் சொல்லி இருக்காரு.''

நதியா: ''சீனிவாசன்னு மலையாளத்துல ஒரு நடிகர் இருக்காரே அவரா? இப்போ தமிழ்லயும் படம் பண்றாரா?''

கல்யாணி: ''சூப்பர் ஸ்டார் இருக்குற தமிழ்நாட்டுல பவர் ஸ்டாரா? யார் அவரு..?''

கடந்த 16 மாதங்களில் மட்டும் எத்தனை முறை பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுள்ளது?

விடை: 10

வெள்ளையன்: ''பெட்ரோலாங்க... மூணாவது முறை. அதனாலதாங்க விலைவாசிஎல்லாம் அடிக்கடி ஏறிடுது.''

ம.செ.: ''ஒவ்வொரு தடவை பெட்ரோல் போடும்போதும் ஷாக் அடிக்கிற மாதிரிதான் இருக்குது. பெட்ரோல் விலை ஏறும்போதெல்லாம் சம்பளமும் ஏறினா எவ்வளவு நல்லா இருக்கும்.''

ஷகிலா: ''பெட்ரோல் விலையா... ரெண்டு தடவைனு நினைக்கிறேன்.''

நதியா: ''பெட்ரோல் ரேட் மே பி தேர்டு டைம்.''

கல்யாணி: ''பெட்ரோலா... அஞ்சு தடவைனு நினைக்கிறேன்!''

பெருங்காயத்தை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடுவது?

விடை: அசாபோடிடா (asafoetida)

வெள்ளையன்: ''நல்ல பேருதாங்க... மனசுக்குள்ள இருக்குது வர மாட்டேங்குது!''

ம.செ.: ''ரசத்திலும் சாம்பாரிலும் பெருங்காயம் போட்டிருந்தா ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன். அதுக்கு இங்கிலீஷ்ல என்னன்னு இனிதான் விசாரிக்கணும்.''

ஷகிலா: ''அசபடிடா... ஏதாவது எனக்குத் தகுந்த மாதிரி கேட்பீங்கனு பார்த்தா ஏதேதோ கேட்குறீங்க!''

நதியா: ''நீங்க எதைச் சொல்றீங்க..? மலையாளத்துல நாங்க காயம்னு சொல்லுவோம் அதுவா? அசோபடேடிடான்னு அதுக்கு இங்கிலீஷ்ல பேரு!''

கல்யாணி: ''அசாபோடிடா... ஒரு கேள்வி சரியா பதில் சொன்னதுக்குலாம் பரிசு கொடுக்க மாட்டீங்களா?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism