பிக்பாஸ் வீட்டுக்குள் `பவர’ காட்டுவாரா சீனிவாசன்!

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்!

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிற போட்டியாளர்களின் பட்டியல் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பங்கேற்கிறவர்கள் யார் என்கிற விவரம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே காமெடி நடிகர் தாடி பாலாஜி ஒரு போட்டியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், `பவர் ஸ்டார்' எனத் தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்ட நடிகர் சீனிவாசனும் ஒரு போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார்.

சீனிவாசன்

`நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனத் தமிழ் சினிமாவின் எந்த ஏரியாவையும் விடுவதில்லை' என ரவுசு பண்ணிய சீனிவாசன், `டாக்டர்’ பட்டம் போட்டுக்கொண்டதும் விமர்சனத்துக்குள்ளானது.

`அப்ப நான் என்ன போலி மருத்துவரா, நான் அக்குபங்சர் மருத்துவர். அதனால டாக்டர்'னு போட எல்லாத் தகுதியும் எனக்கு இருக்கு' என எகிறி அடித்தார்.

சீனிவாசன்

நடிகர் சந்தானத்துடன் நடித்த `கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படமும் ஹிட் ஆக ஆளைக் கையில் பிடிக்க முடியவில்லை.

இதனிடையே, அரசியல் கட்சி ஒன்றிலும் சேர்ந்து பவர் காட்டத் தொடங்கியவர்மீது பண மோசடிப் புகார்களும் குவியத் தொடங்கின. விளைவு, கைது செய்யப்பட்டு சிறையையும் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் பவர் ஸ்டாரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!