''பிக்பாஸில் பங்கேற்கிறேன்... முருங்கைக்காயில் நடிக்கிறேன்!’’ - ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் #VikatanExclusive

 பவர்ஸ்டார்

''பிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. அக்ரிமென்ட் நடைமுறை முடிந்தததும் கலந்துகொள்வேன்’’ என்றார் நடிகர் பவர் ஸ்டார்.

பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்க உள்ள பிரபலங்கள் குறித்த யூகங்களுக்கு மத்தியில், அதில் பங்கேற்கிறார் பவர் ஸ்டார். அவரிடம் பேசினேன்...

’’பிக் பாஸ் சீசன் 2-ல் பங்கேற்கப்போவதாகத் தகவல் வருகிறதே!’’

கேள்வியைக் கேட்டதும் அவருக்கே உரிய பாணியில் சிரித்துக்கொண்டே, ’’ஆமாம் சார், அழைப்பு வந்துள்ளது. அதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு தினங்களில் முடிவாகிவிடும்!’’ 

’’நீங்கள் ஏன் அதில் பங்கேற்கிறீர்கள்?’’

’’அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் பப்ளிசிட்டி கிடைக்கும். அது என் கரியருக்கு நல்லது!’’ 

’’கடந்த சீசனில் பங்கேற்றவர்களிடம் பேசினீர்களா?’’

’’பேசினேன், அவர்களும் சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். பிக்பாஸ் வீடு சூப்பரா இருக்கும். எது செய்தாலும் அது லைவ்வாகத் தெரியும். அதனால் கவனமாகச் செயல்படணும்!’’ 

’’சமீபகாலமாக உங்களின் படம் எதுவும் வெளியாகவில்லையே!’’

’’ 'முருங்கைக்காய்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து, கைவசம் மூன்று படங்கள் இருக்கின்றன. விரைவில் அவை வெளியாகும்!’’ 

’உங்கள் மீதான வழக்குகள் எப்படி இருக்கு?’’ 

’’அது ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நான் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருக்கிறேன்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!