வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (13/06/2018)

கடைசி தொடர்பு:22:20 (13/06/2018)

'குப்பத்து ராஜா’ பாடலில் அம்பேத்கர் புகைப்படம்! - ஜி.வி. பிரகாஷின் பிறந்தநாள் ட்ரீட்

ஜீ.வி.பிரகாஷின்  `எங்க ஏரியா எங்களுது’ என்னும்  `தர லோக்கல் ராப் பாடல்’ இணையத்தில் வைரலாகிவருகிறது. 

ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளரும் நடிகருமாக ஜிவி.பிரகாஷுக்கு 'நாச்சியார்' படத்துக்குப் பிறகு படவாய்ப்புகள் குவிகின்றன. திரைத்துறை மட்டுமின்றி சமூகப் பிரச்னைகளிலும் கவனம் செலுத்திவரும் ஜி.வி.பிரகாஷின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போது பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்  `குப்பத்து ராஜா’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி ஆகியோர் நடித்துள்ளனர்.

நடன இயக்குநரான பாபா பாஸ்கர் இயக்குநராக அவதாரம் எடுக்கும் முதல் திரைப்படம் இது.  இந்தப் படத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். 

இன்று  ஜி.வி.பிரகாஷுன் 31வது பிறந்தநாள். தன் ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட்டாக குப்பத்து ராஜா திரைப்படத்தின் 'எங்க ஏரியா எங்களுது'  என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோவை ஜி.வி.பிரகாஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த தர லோக்கல் ராப் பாடல் காட்சிகளில் அம்பேத்கர், எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிகாந்த்தின் புகைப்படங்களைக் காட்டி குறியீடு வைத்திருக்கிறார் இயக்குநர் பாபா பாஸ்கர். பாடலின் வரிகளும் செம மாஸ்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க