Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

க்ளைமாக்ஸ் நோக்கி `சரவணன் மீனாட்சி’ சீரியல்!

`சரவணன் மீனாட்சி’ சீரியல் ஒருவழியாகக் கிளைமாக்ஸை எட்டிவிட்டது. ஜூலை முதல் வாரத்தில் முடிவடையப்போகிற சீரியல் இறுதிக்கட்ட காட்சிகள் சென்னை புறநகரான குத்தம்பாக்கத்தில் இப்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சரவணன் மீனாட்சி

க்ளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் தொடர் குறித்து ஒரு ரீவைண்டிங்...

`சரவணன் - மீனாட்சி’ முதன்முதலாகத் தொடங்கியபோது மிர்ச்சி செந்திலும் ஶ்ரீஜாவும் ஜோடியாக நடித்தனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்குமிடையே துளிர்த்த நட்பு காதலாகி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் காதல் வெளியே தெரிந்ததையடுத்து தொடரில் மேற்கொண்டு நடிக்க இருவருமே மறுத்துவிட, முடிவுக்கு வந்தது முதல் சீஸன்.

தொடர் ஹிட் ஆனதால் அதே பெயரில் சீஸன் 2 தொடங்கப்பட ஹீரோயினாக கமிட் ஆனார் ரச்சிதா. அவருக்கு ஜோடியாக இர்ஃபான் கமிட் ஆனார். பிக் அப் ஆகத் தொடங்கிய நேரத்தில் இர்ஃபான் தொடரிலிருந்து வெளியேற, வெற்றி வந்தார். ஒரு மாதத்திலேயே அவரும் வெளியேற கவின் கமிட் ஆனார். கவின் - ரச்சிதா ஜோடி பிக் அப் ஆகி சீஸன் இரண்டும் ஒருவழியாக நிறைவுக்கு வந்தது.

அடுத்து ரச்சிதா ரியோ நடிக்க மூன்றாவது சீஸன் தொடங்கி, தற்போது அதுவும் முடியப்போகிறது.

`சரவணன் - மீனாட்சி சீஸன் நான்கும் வருமா என்பது தெரியவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement