வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட `பிக் பாஸ்’ வீடு

பிக் பாஸ் வீட்டில் வாஸ்து எந்திரங்கள்!

வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட `பிக் பாஸ்’ வீடு

ஜூலை 17-ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது, பிக் பாஸ் சீஸன் 2. கமல் தொகுத்து வழங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில், `பிக் பாஸ்' வீட்டின் ஒருநாள் அனுபவத்துக்காகப் பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார்கள். 

பிக் பாஸ் வீடு

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத ஒன்றாக, இந்த முறை பிக் பாஸ் ஜெயில் அமைக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கான பெட்ரூமில் புதிதாக ஒரு பாத்ரூமை இணைத்திருக்கிறார்கள். தவிர, பிக் பாஸ் வீடு முழுக்க மூலை முடுக்குகளைக்கூட விடாமல் பல வாஸ்து எந்திரங்களையும் வைத்திருக்கிறார்கள். ஸ்மோக்கிங் ரூம், கன்ஃபஷன் ரூம், ஹால்... எனக் கண்ணில் படும் அனைத்து இடங்களிலும் இந்த வாஸ்து எந்திரங்கள் இருக்கிறது. பிக் பாஸ் சீஸன் ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிந்து மாதவியைக் கலாய்ப்பதற்காக வீட்டில் பேய் இருக்கு என வதந்தி கிளப்பினார்கள். அதுபோல இந்த முறை வாஸ்து எந்திரங்களை டாஸ்க் ஏதேனும் இருக்கிறதா அல்லது உண்மையிலேயே வாஸ்து பார்த்துதான் பிக் பாஸ் வீட்டை வடிவமைத்திருக்கிறார்களா என்பது நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் தெரியும். 

கமல் மட்டுமல்ல, பிக் பாஸ் வீட்டில் பங்கேற்பவர்களை வாஸ்துகூட வாட்ச் செய்யும்! 

பிக் பாஸ் வீட்டின் ஒரு நாள் அனுபவம் கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

புதிதாக அமைக்கப்பட்ட பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!