மீண்டும் இணையும் `விக்ரம் வேதா' ஜோடி!

`விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து ஷாரூக் கான் நடிக்கும் `ஜீரோ' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார், மாதவன். இந்நிலையில், மாதவனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. `கல்கி' என்ற குறும்படத்தை இயக்கிய திலீப் குமார் இந்தப் படத்தை இயக்க, `விக்ரம் வேதா' படத்தில் நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஜோடி நடிகின்றனர். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கு `மாறா' எனப் பெயரிட்டுள்ளனர். 

விக்ரம் வேதா ஜோடி

`அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய நவீன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகிறார். தீபக் பகவான் ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார். `அப்படத்தில் இவர்கள் நடிப்பில் இடம்பெற்ற`யாஞ்சி யாஞ்சி' என்ற ரொமான்டிக் பாடலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில், இந்த ஜோடி நடிக்கும் அடுத்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!