குட்டி ஷாருக்.. க்யூட் சல்மான்!- ரம்ஜானில் பாலிவுட்டை உற்சாகப்படுத்தும் `ஜீரோ' டீசர்

ஷாரூக் கான், சல்மான் கான் இணைந்து பாலிவுட் ரசிகர்களுக்கு ரம்ஜான் ட்ரீட் கொடுத்துள்ளனர். கான் காம்போவில் வெளியாகியுள்ள ஜீரோ டீசர்தான் அந்த அசத்தல் ட்ரீட்.

ஷாருக் கான்
 

`ஜீரோ’ ... ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஷாரூக் கான், கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள பாலிவுட் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் சல்மான் கான், கஜோல், ராணி முகர்ஜி, அலியா பட், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பாலிவுட் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து காத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. ஜீரோ படத்தின் இன்னொரு ஹைலைட் ஷாரூக் கானின் கேரக்டர். ஷாருக் இந்தப் படத்தில் வளர்ச்சிக் குறைபாடுடைய (dwarf) மனிதராக நடித்துள்ளார். சல்மான் கான் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாராகவே தோன்றுகிறார். 

இந்நிலையில் இன்று ஜீரோ படத்தின் ரம்ஜான் சிறப்பு டீசர் வெளியாகியுள்ளது. அதில் சல்மான் கான் மற்றும் ஷாரூக் கான் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக் கூறியுள்ளனர். இருவரின் லெதர் ஜாக்கெட், ஷாருக் டிஷர்ட்டில் உள்ள பாலிவுட் பிரபலம், சல்மான் கானுக்கு ஷாரூக் கின் முத்தம் என டீசர் முழுக்க அதகளம். பாலிவுட்டின் இரு துருவங்களாகத் திகழும் சல்மான், ஷாருக் டீசரில் க்யூட்டாக அன்பைப் பரிமாறிக்கொள்கின்றனர். எனவே, இரண்டு பிரபலங்களின் ரசிகர்களுக்கும் இடையே இருக்கும் சின்ன சின்ன சோசியல் மீடியா சண்டைகள் கொஞ்ச நாளைக்கு இருக்காது என நம்பலாம்!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!