வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/06/2018)

கடைசி தொடர்பு:20:00 (14/06/2018)

டான்ஸ் ட்ரீட் கன்ஃபார்ம்; பிரபுதேவாவின் `லட்சுமி’ படத்தின் டீசர்..!

`தேவி’ படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய் - பிரபு தேவா கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியுள்ள படம் `லட்சுமி’. இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 

லட்சுமி

`ஏபிசிடி' படத்தைப் போலவே, நடனத்தை மையமாகக் கொண்டுள்ள இந்தக் கதையில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும், கோவை சரளா, கருணாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக நடித்திருக்கிறார். 

 

 

இந்தப் படத்தில் முதல் டீசர் ஏற்கெனவே வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது டீசரும் வெளியாகியிருக்கிறது. இந்த டீசரை பேபி திட்யா நடனமாடும் காட்சியை மட்டும் வைத்தே வெளியிட்டிருக்கிறார்கள். டீசரில் பேபி திட்யாவின் நடனத்தைப் பார்க்கும் போது, படத்தில் டான்ஸ் ட்ரீட் கன்ஃபார்ம் என்பது தெரிகிறது.