வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (14/06/2018)

கடைசி தொடர்பு:22:00 (14/06/2018)

ஷாருக் நடித்துள்ள ஜீரோ படத்தின் டீசருக்கு தனுஷ் பாராட்டு..!

ஷாருக் கான் நடித்த 'ஸீரோ' படத்தின் டீசரை வெளியிட்டார், சல்மான் கான். அதை தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார், தனுஷ்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம், `ஜீரோ'. இந்தப் படத்தின் டீசரை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தனுஷ் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷாருக் - சல்மான் - தனுஷ்

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், ஷாருக் கான், கத்ரீனா கெஃப், அனுஷ்கா ஷர்மா, அபய் தியோ போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம், `ஜீரோ'.  அதுபோக, சல்மான் கான், தீபிகா படுகோன், மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ராணி முகர்ஜி, கஜோல், மாதவன் போன்ற நடிகர் நடிகைகளும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கான் படத்தின் டீசரை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார். 

பல நடிகர்களும், நடிகைகளும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தியில் தனுஷ் நடித்த `ராஞ்சனா' படத்தை ஆனந்த் எல்.ராய்தான் இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரைப் பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஷாருக் கானும் நன்றி தெரிவித்திருக்கிறார்.