’ரீல் வித் ரியல்’ - ரசிகருடன் நடனம் ஆடிய பாலிவுட் நடிகர்!

பாலிவுட் நடிகர் கோவிந்த தன் ரசிகருடன் நடனமாடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் கோவிந்த தன் ரசிகருடன் நடனம் ஆடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

நடனம்


மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிப்பவர் சஞ்சிவ் ஸ்ரீவாஸ்தவா. இவர் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகர்.  46 வயதான இவர், பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நடனமாடுவதில் அதீத ஈடுபாடு உடைய ஸ்ரீவாஸ்தவா தன் உறவினர் ஒருவருடைய திருமணத்தில் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகியது பல லட்சம் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. நடிகர் கோவிந்தாவின் ரசிகர் என்பதால், அவர் போலவே இசைக்கு தகுந்தாற்போல நடனமாடும் ஸ்ரீவாஸ்தவா `டேன்சிங் அங்கிள்’ என டிரெண்டானார். இந்நிலையில் நடிகர் கோவிந்தாவுடன் சேர்ந்து நடனமாடவேண்டும் என்று நெடுநாள் ஆசை கொண்ட ஸ்ரீவாஸ்தவாவின் கனவு சமீபத்தில் நனவானது. ஸ்ரீவாஸ்தவா, நடிகர் கோவிந்தா, நடிகை மாதூரி தீக்சிட் பங்கேற்ற `டான்ஸ் திவானே’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் கோவிந்தாவுடன் இணைந்து நடனமாடினார். இது அவருக்கு அதீத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் மூலம் நடனமாட வயது ஒரு தடையில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!