வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (15/06/2018)

கடைசி தொடர்பு:16:15 (15/06/2018)

நஸ்ரியா கம்பேக் கொடுத்திருக்கும் `கூடே’ படத்தின் சிங்கிள் ட்ராக்!

அஞ்சலி மேனன் இயக்கத்தில் ப்ரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா நடிப்பில் வெளியாக இருக்கும் கூடே படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது.

அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் 'கூடே'. நான்கு வருட இடைவெளிக்குப் பின் நஸ்ரியா இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார். பிரித்விராஜ், பார்வதி போன்றவர்களும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 

நஸ்ரியா

ஃபகத் ஃபாஸிலுடன் திருமணமான பிறகு, சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார் நஸ்ரியா. அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளிவந்த `பெங்களூர் டேஸ்’ படத்துக்குப் பின் எந்தப் படத்திலும் இவர் நடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து மீண்டும் அஞ்சலி மேனன் படத்திலேயே நடித்து மீண்டும் திரைத்துறைக்கு ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார் நஸ்ரியா. இந்தப் படத்தின் `ஆராரோ' என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகியிருக்கிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்ச பார்வைகளைக் கடத்து, ட்ரெண்டிங்கில் 20 வது இடத்தையும் பிடித்துள்ளது. நான்கு வருட இடைவேளைக்குப் பின் நஸ்ரியாவை திரையில் காணப்போவதால் அவர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

படத்துக்கு ரகு டிக்ஸிட் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக லிட்டில் ஸ்வாயம்ப் வொர்க் பண்ணியிருக்கிறார். ரெஜபுத்ரா விஷுவல் மீடியா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.