`ரைஸ் ஆஃப் டான்’... மாஸ் காட்டும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள ஜுங்கா படத்தின் `டான்’ பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதி
 

விஜய் சேதுபதி - இயக்குநர் கோகுல் காம்போவில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் நகைச்சுவை, காதல் என நடிப்பில் அசத்தியிருப்பார் விஜய் சேதுபதி. `குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்னும் வைரல் வசனத்தைத் தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமாட்டார்கள். இந்த ஹிட் கூட்டணி `ஜுங்கா’ மூலம் மீண்டும் கைகோத்துள்ளது. விஜய் சேதுபதியுடன்  `வனமகன்’ சயீஷா, மடோனா செபாஸ்டியன் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த இந்தப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அனைவரும் வேஷ்டி, ஜிப்பா அணிந்து வந்து விழாவையே கலகலப்பாக்கினர். இசை வெளியீட்டு விழாவில் அனைவரும் அணிந்திருந்த ஆடை புதிய ட்ரெண்டாகி வருகிறது. 

ஜுங்கா ஆடியோ லான்ச் ஃபீவர் ஓய்வதற்குள் `டான் எழுச்சி’ அதாவது ‘Rise of Don' என்னும் மாஸ் பாடலை வெளியிட்டுள்ளது ஜுங்கா படக்குழு. `Age 32... shirt 42... weight 82...' என்ற ராப் இசையுடன் ஆரம்பமாகிறது பாடல். பாடல் முழுவதும் வித்தியாசமான மாஸ் கெட்டப்பில் தோன்றுகிறார் விஜய் சேதுபதி. `ஜுங்கா’ கண்டிப்பாக ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்கும்!

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!