வருமான வரித்துறை வழக்கு - அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பித்தார் நடிகை த்ரிஷா! | trisha got favorable judgement in Income tax case

வெளியிடப்பட்ட நேரம்: 05:28 (16/06/2018)

கடைசி தொடர்பு:12:01 (16/06/2018)

வருமான வரித்துறை வழக்கு - அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பித்தார் நடிகை த்ரிஷா!

நடிகை த்ரிஷா மீதான வருமானவரித்துறை வழக்கில் நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை த்ரிஷா. பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவரின் இன்றும் குறையவில்லை. இதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் த்ரிஷா ஒரு பெரிய சிக்கலில் இருந்து நேற்று தப்பித்துளார். அதாவது, கடந்த 2010 - 11 ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாகக் கணக்கு காட்டி வருமான வரித்துறைக்கு வரி செலுத்தியிருந்தார். அதனை ஏற்காத வருமான வரித்துறை ஆய்வு நடத்தியது. 

இதில் அந்த ஆண்டில் மட்டும் த்ரிஷா ரூ.3.52 கோடி வருமானம் பெற்றதாக கூறி அவருக்கு ரூ. 1.16 கோடி அபராதம் விதித்து. இதனால் ஆடிப்போன அவர், வருமான வரித்துறையின் அபராதத்துக்கு எதிராக அதன் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அபராதம் செலுத்த வேண்டாம் என அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனால் அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வருமான வரித்துறை தொடர்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை இன்று தலைமை நீதிபதி அமர்வு வழங்கியது. அதில்,  அபராதத்தை ரத்து செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்ததுடன், 3.52 கோடி வருமானத்துக்கான கணக்கை த்ரிஷா ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டார் என உத்தரவிட்டது. இதனால் த்ரிஷாவுக்கு வந்த பெரிய சிக்கல் தீர்ந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க