வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (17/06/2018)

கடைசி தொடர்பு:21:00 (17/06/2018)

பிக்பாஸ் போட்டியாளரான பாலா பட கதாநாயகி!

'தெகிடி' படத்தில் நடித்த ஜனனி ஐயர் மூன்றாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். 

பிக் பாஸ் - ஜனனி ஐயர்

பிக் பாஸ் போட்டியாளர்களாக ஐந்து பேர் அறிமுகமாகி வீட்டிற்குள் நுழைந்தார்கள். யாஷிகா, பொன்னம்பலம், மகத், டேனியல், ஆர்.ஜே வைஷ்ணவி என இவர்களைத் தொடர்ந்து, ஜனனி ஐயர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆரம்ப காலத்தில் விளம்பரங்களில் நடித்த ஜனனி ஐயர் 'திரு திரு துறு துறு' எனும் படத்தின் மூலம் கேமியோவாக நடித்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர். அதற்குப் பின்னர் பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' படத்தில் மெயின் ரோலில் நடித்து பலரது கவனத்தையும் பெற்றார், ஜனனி. மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வரப்போவது ஆணா பெண்னா என உள்ளே இருப்பவர்கள் பெட் கட்டிக்கொண்டிருக்க, மிகுந்த எதிர்பார்ப்புடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், ஜனனி ஐயர்.