வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (17/06/2018)

கடைசி தொடர்பு:21:05 (17/06/2018)

பிக் பாஸ் வீட்டிற்குள் ’சூப்பர் சிங்கர்’ அனந்த் வைத்தியநாதன்..!

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனியைத் தொடர்ந்து வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டிற்குள் ஏழாவது போட்டியாளராக நுழைந்திருக்கிறார்.

அனந்த் வைத்தியநாதன்

விஜய் டிவியின் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான அனந்த் வைத்தியநாதன், பாலா இயக்கிய அவன் இவன் படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சென்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது சற்று ஆச்சரியமாக இருந்தாலும், வயது மூத்தவர் என்பதால் மற்ற போட்டியாளர்களை வழிநடத்துவார் என்றும் பிக்பாஸ் வீட்டிற்குள் கச்சேரி நடத்துவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

பல தயக்கங்களுக்குப் பிறகே இந்த நிகழ்ச்சிக்குள் வர வேண்டும் என நினைத்தேன் என்று கமலிடம் அனந்த் வைத்தியநாதன் கூறிய போது, தற்போது தனியாக வசித்து வருவதாக அவர் கூறியதும், லக்கி மேன் என்று கூறி வீட்டுக்குள் வழியனுப்பி வைத்தார் கமல்.