வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (17/06/2018)

கடைசி தொடர்பு:21:49 (17/06/2018)

பிக்பாஸ் போட்டியாளராக மும்தாஜ்!

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா என்.எஸ்.கே, சென்ராயன், ரித்விகாவைத் தொடர்ந்து நடிகை மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்திருக்கிறார். 

மும்தாஜ்

'மோனிஷா என் மோனலிசா' படத்தின் மூலம் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட மும்தாஜ், 'குஷி' படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து தனக்கான புகழை தக்க வைத்துக் கொண்டிருந்தவர், சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் ப்ரேக்கில் இருந்தார். தற்போது, ’எனக்குள்ள தூங்கிட்டு இருக்குற மிருகத்தை எழுப்பிடாதீங்க’ என்கிற டிஸ்க்ளைமரோடு பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார் மும்தாஜ். பல நாள்களாக வெள்ளித்திரையில் மும்தாஜை மிஸ் செய்தவர்கள், அவரை இனி சின்னத்திரையில் காணலாம்.