வெளியிடப்பட்ட நேரம்: 22:52 (17/06/2018)

கடைசி தொடர்பு:07:46 (18/06/2018)

15வது போட்டியாளரான ரியாஸ் - உமா ரியாஸின் மகன்..!

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்தியநாதன், NSK ரம்யா, சென்ராயன், ரித்விகா,மும்தாஜ், தாடி பாலாஜி, மமதி, நித்யாவைத் தொடர்ந்து 15வது போட்டியாளராக நடிகர்கள் ரியாஸ் மற்றும் உமா ரியாஸின் மகனான ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

பிக் பாஸ்

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ’பென்சில்’ படத்தில் வில்லனான நடித்த ரியாஸ் மற்றும் உமா ரியாஸ் தம்பதிகளின் மகனான ஷாரிக், தற்போது பிக் பாஸ் போட்டியாளராக நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். நடிகர் மட்டுமல்லாது விளையாட்டு வீரரான ஷாரிக்கை, பாட்டி கமலா காமேஷ், அப்பா ரியாஸ், அம்மா உமா, தம்பி சமத் என குடும்பமாக வந்து அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.