யார் நல்லவர் யார் கெட்டவர்... பிக் பாஸ் கடைசிப் போட்டியாளரும் வந்தாச்சு!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகும் கடைசிப் போட்டியாளர், ஐஷ்வர்யா தத்தா . 

ஐஷ்வர்யா தத்தா - பிக் பாஸ்

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார், ஐஷ்வர்யா தத்தா . அதற்குப் பின் 'பாயும் புலி' படத்தில் காஜல் அகர்வாலின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'கதாநாயகி ஆகிவிட வேண்டும்' என்ற கனவோடுதான் இவரும் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகளோடு சரி அதன் பின்னர், பெரிதாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த இவர், எந்திரன் பட பாடலுக்கு அசத்தலான டான்ஸோடு பிக் பாஸ் மேடையில் என்ட்ரி கொடுத்தார். எல்லோரைப்போலவும் இவரும் கமலிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு பேசத் தொடங்கினார். தமிழர்களின் பெருமையை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டு எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், ஐஷ்வர்யா தத்தா. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் வீட்டிற்குள் ஒன்று கூடிவிட்டார்கள். இதில் யார் நல்லவ யார் கெட்டவர். பொருத்திருந்து பார்ப்போம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!