முதல் நாளே சசிகலாவைச் சீண்டினாரா கமல்? – பிக்பாஸில் அரசியலுக்கு கியாரண்டி

பிக் பாஸ் ஷோவில் சசியின் ஜெயில் வசதியைக் கலாய்த்த கமல்

பிக்பாஸ் முதல் சீசன் நடந்து கொண்டிருந்தபோதுதான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் சசிகலாவுக்கு அநேக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. உடனேயே அது குறித்து பிக்பாஸ் ஷோவிலும் பதிவு செய்தார் கமல். ‘வெளியில ஃபைவ் ஸ்டார் ஜெயிலெல்லாம் இருக்கு’ என அப்போது குறிப்பிட்டிருந்தார் கமல்.

கமல்

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் அந்த வீட்டுக்குள்ளேயே ஒரு ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் விதிமுறைகளை மீறுகிறவர்களையும் தப்பு செய்கிறவர்களையும் தண்டிக்க எனச் சொல்லப்படுகிறது. முதல் எபிசோடில் அந்த ஜெயிலுக்குள் விசிட் செய்த கமல், ‘என்ன ஃபேன் கூட இல்லயே, அப்ப ஒரிஜினல் ஜெயில் இல்லையா’ எனக் கேட்கிறார். சென்ற ஆண்டு சிறையில் சசிகலா வசதி வாய்ப்புகளை அனுபவித்ததைக் கலாய்த்ததை போலத்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

சென்ற ஆண்டு முறையாக அரசியல் கட்சி தொடங்கப்படாத நிலையிலேயே கமலின் பேச்சில் அரசியல் நெடி இருந்த நிலையில், இந்தாண்டு ‘மக்கள் நீதி மய்யம்’ தொடங்கப்பட்டு விட்ட பிறகு விடுவாரா?. கமல் அரசியல் பேசுவார் என்பது எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்டதே. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என்பது முதல் நாளிலேயே தெரிந்து விட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!