வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (18/06/2018)

கடைசி தொடர்பு:16:54 (18/06/2018)

விஜய் பிறந்தநாளில் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

பிறந்தநாளான வரும் 22-ம் தேதி தனது படத்தின் டைட்டில் மற்றும். ஃபஸ்ட்லுக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இருக்கிறார் நடிகர் விஜய்.

விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும்  'விஜய் -62' படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லூக்கையும் இன்னும் வெளியிடாமல் விஜய் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்து வருகின்றது சன்பிக்சர்ஸ். இந்தக் கதை ஏற்கெனவே முருகதாஸ், ரஜினியிடம் சொல்லி பாராட்டு வாங்கிய கதை. படத்தில் அரசியல்வாதிகளாக ராதாரவி, பழ.கருப்பையா நடித்துள்ளனர்.

'மெர்சல்' படத்தில் மூன்று வேடங்களில் தோன்றிய விஜய், முருகதாஸ் படத்தில் எத்தனை வேஷமோ என்று எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதுவரை 'விஜய் 62' என்று புதுப்படத்தின் பெயரை உச்சரித்து வந்தவர்கள் விஜய் பிறந்தநாளான  ஜூன் 22-ம் தேதி முதல் விஜய் பட டைட்டிலை முணுமுணுப்பார்கள். அன்றைக்கு விஜய் படத்தில் ஃபஸ்ட்லுக்கை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க சன்பிக்சர்ஸ் திட்டமிட்டு வருகிறது.      

நீங்க எப்படி பீல் பண்றீங்க