Published:Updated:

பாரில் இனி ஃபாரின்!

ரீ.சிவக்குமார், ஓவியம் :ஹரன்

பாரில் இனி ஃபாரின்!

ரீ.சிவக்குமார், ஓவியம் :ஹரன்

Published:Updated:
##~##

ண்டுக்கு 14,000 கோடி ரூபாய் வருமானம் கொட்டும் டாஸ்மாக் சார்பில் இப்போது புதிதாக வெளிநாட்டு மதுபானங்களை விற்க 'எலைட் ஷாப்’களைத் திறப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. 'உயர் ரக மது வகைகள், குளிரூட்டப்பட்ட பார், கம்ப்யூட்டர் பில்’ எனக் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் நீள்கிறது இந்த அறிவிப்பு. உங்கள் கருத்து என்ன என்று பிரபலங்கள் சிலரிடம் கேட்டேன்...

 குமரி அனந்தன், (காங்கிரஸ்): ''அந்நிய நாட்டு மதுபானங்களை இங்கே விற்க அனுமதிப்பது குடும்பங்களில் இருப்பவர்களையும் அந்நியம் ஆக்கிடவே உதவும். சீர்கெட்ட இந்த மதுக் கலாசாரத்தை அரசே ஊக்குவிப்பது மதுக்கடைகளை எதிர்த்துப் போராடிய தியாகி களையும் நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த அண்ணல் காந்தியடிகளையும் அவமதிக்கும் செயலாகும்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரில் இனி ஃபாரின்!

சாரு நிவேதிதா (எழுத்தாளர்): ''நிச்சயமாக வரவேற்கத்தக்க அறிவிப்பு. 10 ரூபாய் கொடுத்து காபி குடிக்கிற ஹோட்டல்களிலேயே வரவேற்று தண்ணீர் கொடுக்கிறார்கள். ஆனால், 100 ரூபாய் கொடுத்து சரக்கு வாங்கும் டாஸ்மாக்கில் தண்ணீரை நாம்தான் விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. சரியான கழிப்பிட வசதிகளும் டாஸ்மாக்கில் இல்லை. ஒரு நாள் எனக்குப் பின்னால் டாஸ்மாக்கில் குடித்துக்கொண்டு இருந்தவர் அங்கேயே சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்தார். என்ன ஓர் அவலம் பாருங்கள்! டாஸ்மாக் கடைகள் தரம் உயர்த்தப்படுவது நல்ல விஷயம்!''

நல்லசாமி, (தமிழ்நாடு கள் இயக்கம்): ''ஏற்கெனவே தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கும் தமிழக அரசு, எலைட் ஷாப்களைத் திறப்பதன் மூலம் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக் கப்போகிறது. இப்படி வெளிநாட்டு மது வகைகளை ஊக்குவிக்கும் அரசு கள் விற்ப தற்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கிறது? இப்படி விலை அதிகம் உள்ள மது வகை களுக்கு என்று தனியாகக் கடைகள் திறப் பது குடிப்பவர்களிடத்தில் வர்க்க பேதத்தை யும் ஏற்றத் தாழ்வையும்தான் உருவாக்கும். உயர் ரக மது வகைகளைக் குடிக்க வேண்டும் என்பதால் இனிமேல் லஞ்சம், திருட்டு ஆகியவையும் அதிகரிக்கும். ஆனால், இந்திய அரசியல் சாசனத்தின்படி கள் என்பது போதைப்பொருளே அல்ல. மதுக்கடைகளை அதிகரிக்கும் இந்தச் சூழலி லாவது கள் விற்பனையையும் மறுபரி சீலனை செய்ய அரசு முன்வர வேண்டும்!''

நாஞ்சில் நாடன்  (எழுத்தாளர்): ''50 ஆண்டு களுக்கு முன்பு இந்தியாவில் வளர்ப்பு நாய்களுக்கான பொருட்களாகச் சோப்பும் பிஸ்கட்டும் மட்டும்தான் கிடைத்தன. ஆனால், இன்று 250 வகையான பொருட் கள் கிடைக்கின்றன. வெளிநாட்டு கேமராக் கள், பெர்ஃப்யூம்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவை மடைதிறந்த வெள்ளம்போல் இந்தியாவுக்குள் வரும்போது, வெளிநாட்டு மதுவகைகள் வருவதை மட்டும் தடுக்க

பாரில் இனி ஃபாரின்!

முடியாது. மாதம் ஒரு லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு ஒரு ஃபுல் பாட்டிலை 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குவது பிரச்னையாக இருக்காது. ஆனால், 10 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ளவர்களும் அதை வாங்க வேண்டும் என்று ஆசைப்படும்போது அதிகம் பாதிக்கப்படப்போவது மத்தியதர வர்க்கம்தான்!''

ஓவியா (பெண்ணியவாதி): ''அடிப்படை யில் எனக்கு மதுவிலக்கின் மூலம் மதுவை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஒருவர் குடிப் பதா, வேண்டாமா என்பதை அரசு தீர்மானிக்க முடியாது. மது என்பது மோசமான விஷயமாக இருந்தாலும் அதைத் தடைசெய்தால் கள்ளத் தனமாக மது விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில், அரசே மது வியா பாரம் செய்வதும், அதன் மூலம்தான் முதன்மையான வருமானம் கிடைக்கிறது என்று சொல்வதும் அவமானகர மானவை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism