வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (19/06/2018)

கடைசி தொடர்பு:09:37 (19/06/2018)

`பாலியல் வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி தேவையில்லை' - நடிகையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

கேரள முன்னணி நடிகை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி நியமிக்க வேண்டிய தேவை இல்லை என கோர்ட் தெரிவித்துள்ளது.

கேரள முன்னணி நடிகை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி நியமிக்க வேண்டிய தேவை இல்லை என கோர்ட் தெரிவித்துள்ளது.

நடிகர் திலீப்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த முன்னணி கேரள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரங்கேறியது. கேரளத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் நடிகையின் கார் டிரைவர் மார்ட்டின், பல்சர் சுனி ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் திலீப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட் மற்றும் பெண் நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை எர்ணாகுளம்  பிரின்ஸ்பல் செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனிக் கோர்ட் பெண் நீதிபதி தேவையில்லை எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் ஏற்கனவே கேரள போலீஸ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேரள ஐகோர்ட்டில் நடிகர் திலீப் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.