வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (19/06/2018)

கடைசி தொடர்பு:12:00 (19/06/2018)

`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை!

இந்தியில் டப் செய்யப்பட்ட நடிகர் அஜித் நடித்த விவேகம் திரைப்படம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

அஜித்

சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்த திரைப்படம் 'விவேகம்'. கடந்த வருடம் ஆகஸ்ட் 24-ம் தேதியன்று இப்படம் வெளியாகியது. படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து படம் தோல்வி என ஒருபக்கம் கருத்துகள் எழுந்தாலும், வழக்கம்போல அஜித் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர். படத்தில் நிறைய மைனஸ்கள் இருந்ததால் வசூல் ரீதியாக இந்தப்படம் வெற்றிபெறவில்லை எனக் கூறப்பட்டுவருகிறது. எனினும் அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. விசுவாசம் எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையே, அஜித் நடித்த `விவேகம்' படம் தற்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது. 

அதாவது, சமீபகாலமாக அஜித்தின் தமிழ்ப் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுவருகிறது. அந்த வரிசையில் விவேகம் திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு நேற்று முன்தினம் யூடியூபில் பதிவிடப்பட்டது. யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் இப்படத்தை 54,80,000 பேர் பார்த்துள்ளனர். தற்போது வரை 8 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் இந்தி டப்பில் வெளியாகி 24 மணி நேரத்தில் அதிக பேர் பார்த்த படம் என்ற பெருமையை விவேகம் பெற்றுள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் சரைனோடு படம் வெளியான 24 மணி நேரத்தில் 53,40,000 பேர் பார்த்ததே சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை தற்போது விவேகம் படம் முறியடித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்களும், படக்குழுவினரும் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க