Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:

•  நார்வே அரசு 'அமைதிக்கான அடமானங்கள்’ (Pawns of peace) என்ற பெயரில் இலங்கையில் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கான காரணங்களை அறிக்கையாக வெளியிட்டுஉள்ளது. 'தமிழ் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என வெளிப்படையாகக் காட்டிக்கொண்டது இந்தியா. ஆனால், உண்மையில் புலிகளை ஒழிக்க விரும்பியது. புலிகளுடன் நெருக்கமாக இருப்பதாக நார்வே அரசைப் பல முறை இந்தியா விமர்சனம் செய்தது. இறுதிக் கட்டப் போரில் புலிகள் சரணடைவதை இலங்கையோடு சேர்ந்து இந்தியாவும் விரும்பவில்லை!’ என்பது அந்த அறிக்கையின் சாராம்சம். நம்பவெச்சுக் கழுத்தறுத்துட்டாங்களே!

இன்பாக்ஸ்

• சச்சினைப் பகைத்துக்கொண்டதுதான் கிரிக்கெட் வாழ்வில் தான் செய்த பெரிய தவறு என இப்போது ஒப்புக்கொண்டுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல். ''சச்சினை எப்போதும் நான்காவது பேட்ஸ்மேனாகக் களம் இறக்கினேன். ஒரு முறை 'உங்கள் ஆட்டத்தில் திருப்தி இல்லை. இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்!’ என்று கோபமாகச் சொல்லிவிட்டேன். அப்போது, 'சச்சினை யாரும் இப்படிப் பேசியது இல்லை’ என்று என்னோடு சண்டை போட்டார் ராகுல் டிராவிட்!'' என்று சுயசரிதைப் புத்தகத்தில் வருத்தப்பட்டு இருக்கிறார் சேப்பல். இப்போவாது தோணுச்சே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

•  100 படங்களில் நடிக்கும் அசாதாரண மைல்கல்லை '1911’ என்ற படம் மூலம் தொட்டிருக்கிறார் ஜாக்கிசான். இந்தப் படத்தில் அவரது வழக்கமான ஸ்டைல் சண்டைக் காட்சிகளே இருக்காதாம். வரலாற்றுப் படம் என்பதால், வித்தியாசமான சண்டைக் காட்சி களை அமைத்துப் படத்தை இயக்கியிருக்கிறார். வாழ்த்துக்கள் ஜாக்கி!

இன்பாக்ஸ்

•  ரசிகர்களுடன் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டாலும், ஆட்டோகிராஃப் போடுவது இல்லை த்ரிஷா. ''என்ன சாதிச்சுட்டேன்னு ஆட்டோகிராஃப் போடுறது? சாதிச்சவங்க நிறையப் பேர் இருக்காங்க. அவங்ககிட்ட ஆட்டோகிராஃப் வாங்குங்க!'' என்பது த்ரிஷாவின் அட்வைஸ். இப்படிச் சொன்னதுக்கே உங்க  ஆட்டோகிராஃப் கேட்கலாம் த்ரிஷ்!

இன்பாக்ஸ்

•  எங்கே ஷூட்டிங் சென்றாலும் கேமரா இல்லாமல் செல்ல மாட்டார் அஜீத். கோவாவில் 'பில்லா-2’ ஷூட்டிங் இடைவெளியின்போது பாதி செதுக்கிய நிலையில் இருக்கும் சிவன் சிலையை க்ளிக் செய்திருக்கிறார். ''இதைச் செதுக்கிய சிற்பி வெளிநாட்டுக்காரர். பாதி சிலையை உருவாக்கிக்கொண்டு இருக்கும்போதே அவரது விசா முடிந்துவிட்டதாம். அதனால், அவரைச் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்!'' என்கிறார் அஜீத். தல கண்டுபிடித்த சிலை!

இன்பாக்ஸ்

•  ஒருவழியாகத் தங்களது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது 'சைஃபீனா’ ஜோடி. (சயீஃப் அலிகான் - கரீனா) பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணமாம். 'இனியும், என்னால் கரீனாவைவிட்டுப் பிரிந்து இருக்க முடியாது!’ என்று சயீஃப்பும், 'எனக்கு சயீஃப் மேல் காதல் அதிகமாகிவிட்டது!’ என்று கரீனாவும் மாறி மாறி மீடியாவில் லவ்ஸ் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிங்கப்பா!

•  ரஜினிகாந்த்துக்கு பி.எம்.டபிள்யூ. காரைப் பரிசாக அளிக்க இருக்கிறார் ஷாரூக். எப்போதும் தான் நடித்த படம் வெளியானதும் அதில் தன்னோடு பணிபுரிந்தவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது ஷாரூக்கின் வழக்கம். அப்படி 'ரா-ஒன்’ படத்தில் நட்புக்காக ரஜினி 'நடித்ததற்காக’ இந்த அன்புப் பரிசாம். மீசை இல்லாத நண்பா உனக்குப் பாசம் அதிகம்டா!

இன்பாக்ஸ்

•  இந்த முறையும் உலக அழகிப் போட்டியில் இந்தியாவுக்கு ஜெயம் இல்லை! இந்திய அழகி கனிஷ்தா தன்கர் இறுதிச் சுற்றைக்கூட எட்டவில்லை. பட்டம் வென்ற வெனிசுலாவின் 22 வயது இவியான் சர்கோஸ் மலையேற்றத்தில் கில்லியாம். அதான் புகழ் சிகரத்தை எட்டிப் பிடிச்சுட்டாங்களே!

• இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 12.10 கோடியாக உயரும் என்கிறது இந்திய இணைய தள மற்றும் மொபைல் சங்கத்தின் அறிக்கை. இந்த 12 கோடி பேரில் 9 கோடி பேர் தொடர்ந்து இணையதளம் உபயோகிப்பவர்கள். இதில் மூன்று கோடி பேர் மட்டுமே ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கிறார்கள். இன்டர்நெட் உபயோகிப்பவர்களில் 24.5 கோடி பேருடன் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவை இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா ஓவர்டேக் செய்துவிடுமாம். WWW என்ற மூன்றெழுத்தில் எல்லோரின் மூச்சிருக்கும்!

இன்பாக்ஸ்

•  சல்மான் தற்போது நியூக்ளியர் ஆராய்ச்சியில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். அடுத்த படமான 'ஏக் தா டைகர்’ படத்தில் அணு ஆயுத ரகசியங்களைக் கடத்தும் பிரிட்டன் உளவாளியாக நடிக்கிறார். அதற்காக அமீர் கானின் அட்வைஸ்படி, அணு சக்தி சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்துக்கொண்டு இருக்கிறார். ''படிக்கிற காலத்துல சரியா படிக்காம இப்போ கஷ்டப்படுறியே'' என்று நண்பர்கள் கிண்டல் அடிக்கிறார்களாம். படிப்புல விட்டதை நடிப்புல பிடிச்சிருங்க!

இன்பாக்ஸ்

•  இப்போது விக்ரம், அஜீத், கார்த்தி ஆகியோரின் படங்களில் அனுஷ்காதான் ஹீரோயின். தமிழ்நாட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் ஆகிவிட்ட அனுஷ்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு படத்துக்கு 1.25 கோடி ரூபாய். கிளாமர் காட்டு... கல்லா கட்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism