Published:Updated:

யார் இந்த காகா?

ந.வினோத்குமார்

யார் இந்த காகா?

ந.வினோத்குமார்

Published:Updated:
##~##

''நான் எப்போதும் புகழ்பெற்றவளாகத்தான் இருக்கிறேன். ஆனால், உங்களுக்குத்தான் அது தெரியவில்லை!'' - இதுதான் லேடி காகாவின் அதிரடி அஜெண்டா!

 ஸ்டெஃப்னி ஜோன் ஏஞ்சலினா ஜெர்மனோட்டா அல்லது சிம்பிளாக, பிரபலமாக லேடி காகா! சர்வதேச பாப் உலகில் இன்று நம்பர் 1 ஸ்டார்! அதீத ஆர்வம், அழகான அர்ப்பணிப்பு, கொஞ்சம் கிறுக்குத்தனம்... இது தான் லேடி காகா!  ''வாழ்க்கை சிலருக்கு எப்போதும் உச்சங்களைத் தந்து கொண்டே இருக்கும். ஆம், சிலருக்கு மட்டுமே!'' என்ற பொன்மொழி காகாவுக்கு அத்தனை பொருத்தம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நியூயார்க்கில் பிறந்த காகா நாலு வயதிலேயே பியானோ இசைக்கத் தொடங்கிவிட்டார். தனது முதல் பாடலை எழுதி இசைத்தபோது அவருக்கு 13 வயது!

யார் இந்த காகா?

17 வயதில் அவ்வளவு எளிதாக யாருக்கும் அனுமதி கிடைக்காத நியூயார்க் பல்கலைக்கழகத்தில் காகாவுக்கு இடம் கிடைத்தது. அவரது நோட்டுப் புத்தகங்களில் பாடங்களுக்குப் பதிலாக, பாடல் ரிதம் குறிப்புகள்தான் நிரம்பி வழிந்தன. இசை... அதுவும் பாப் இசை மட்டுமே அவரின் நோக்கமாக இருந்தது. பல்கலைக்கழத்தில் இருந்து வெளியேறினார். அதீத அர்ப்பணிப்பு உணர்வுக்குக் கொஞ்சமும் குறையாமல் கிறுக்குத்தனச் சேட்டைகள் நிரம்பியவராகவும் இருந்தார் காகா.

காகா புரஃபஷனலாகப் பாடி வெளியான முதல் பாடல் 'பாய்ஸ் பாய்ஸ் பாய்ஸ்’. வெளியான நொடி முதல் சக்கைப் போடு போட்டது. அதுவரை பாப் பாடல் என்றால் இசைக் கருவிகளுடன் மல்லுக்கட்டுவதுதான் என்கிற இலக்கணத்தை மாற்றியது. சிந்தஸைசர் குரலால், அவரது பிரத்யேக 'கிறுக்குத்தனம்’ கொடுத்த டெம்போ கலந்து சூடேற்றும்  மாடுலேஷனில் அவர் பாடிய பாடல் ஒரே இரவில் ரசிகர்களைச் சுருட்டிப்போட்டது!

முதல் பாடல் ஹிட்டான சமயமெல்லாம் அவர் ஸ்டெஃப்னிதான். காகாவின் தயாரிப் பாளர் எண்பதுகளில் பிரபலமான 'ரேடியோ கா கா’ என்ற பாடலை அடிக்கடி பாடியபடியே இருப்பார். ஒரு முறை அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸில் 'ரேடியோ காகா’ என்று டைப் செய்து அனுப்பியது தவறுதலாக  'லேடி காகா’ என்று சென்றிருக்கிறது. அப்போது தனக்கான ஒரு மேடைப் பெயரைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்த ஸ்டெஃப்னி அந்த நிமிடம் முதல் 'லேடி காகா’ ஆனார்!

யார் இந்த காகா?

2008-ல் 'தி ஃபேம்’ என்ற தன் சொந்த ஸ்டுடியோவைத் தொடங்கினார். அதில் இருந்து வெளியான முதல் ஆல்பம் 'ஜஸ்ட் டான்ஸ்’  தொடங்கி, 'போக்கர் ஃபேஸ்’, 'எ... எ...’, 'லவ் கேம்’, 'பாப்பரஸி’ என அனைத்து ஆல்பங்களும் ஹிட்! கிராமி விருது, எம்.டி.வி. விருது என பாப், ராக் இசைப் பிரிவுகளுக்காக வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் தன் கிரெடிட்டில் வைத்திருக்கிறார் காகா.

புகழ் கிராஃப் ஏற ஏற... காகாவின் கிராக்குத்தனமும் அதிகரித்தது. எப்போதும் போதையிலேயே திளைப்பது, மேடையில் 'ரத்தக் குளியல்’ போடுவது, உள்ளாடைகளை மட்டுமே ஆடைகளாக அணிவது, இறைச்சியை மேலாடையாக அணிந்துகொள்வது, பாடல்களுக்கு இடையே கெட்ட வார்த்தைகளைச் சும்மா உதிர்ப்பது என காகாவின் சேட்டைகள் அன்லிமிடெட் அளவை எட்டின. ஆனால், இவை அனைத்தையும் அவரது பாடும் திறனுக்காக ரசிகர்கள் பொறுத்துக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அவரின் கிறுக்குத்தனங்களே அவரின் ஆல்பங்களுக்கு விளம்பரங்களாக மாறின.

''அதிக படிப்பார்வம், அதிக ஒழுக்கம் இவற்றோடு நான் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததாக எப்போதும் உணர்ந்துகொண்டே இருந்தேன்!'' என்று காகா ஒரு பேட்டியில் மனம் திறக்கவும், ''அந்த பாதுகாப்பற்ற சூழல்தான் அவரைக் கிறுக்குத்தனமாக நடந்துகொள்ள வைத்திருக்கலாம்!'' என்று காகாவுக்காகச் சமாதானம் சொன்னார்கள் அவரது ரசிகர்கள்.

இதற்கிடையே எய்ட்ஸ் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது, தன்னை ஒரு 'கே’வாக அடையாளப்படுத்திக்கொண்டு பாலினச் சிறுபான்மையினரின் நலனுக்காகப் பணியாற்றுவது எனச் சில

யார் இந்த காகா?

நல்ல காரியங்களிலும் ஈடுபடுகிறார் காகா.

''இசைதான் என் வாழ்க்கை என்று முடிவெடுத்த பிறகு என் குடும்பத்தைப் பிரிந்தேன். குப்பைகளைச் சாப்பிட்டேன். என் பாடல்களை எல்லோரையும் கேட்க வைக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் குறிக்கோளாக இருந்தது. இன்று நான் அதைச் சாதித்து இருக்கிறேன்!'' என்கிறார் இந்த ஃபேஷன் பியூட்டி.

வருங்காலத்தில் 'லேடி காகா யார்’ என்ற கேள்விக்கு அவருடைய ஆல்பம் ஒன்றின் தலைப்பே பதிலாக இருக்கும்... 'பார்ன் திஸ் வே (Born this way)!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism